
எமது சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, பிரித்தானியாவில் வாழும் காரைநகர் மக்கள் தாங்களாகவே ஒருங்கிணைத்து சில ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
பிரித்தானியாவில் வாழும் பிரதேச எல்லைகளை அடிப்படையாக வைத்தோ, அல்லது காரைநகரில் உள்ள ஏதோவொரு இணைப்புக்களை அல்லது தொடர்புகளை அடிப்படையாக வைத்தோ இந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
‘ வேறு வேறு நதிகளாக ஓட ஆரம்பித்து, கடைசியில் கடலில் கலத்தல்’ எனும் விவேகானந்தரின் கூற்றுக்கு அமைய, ஆங்காங்கே சிறு சிறு ஒன்று கூடல்களாக கூடியவர்கள், எமது சங்க ஒன்று கூடல்களில் வந்து கலந்துவிடுவார்கள்.
அதற்கமைய கீழ்வரும் ஒன்றுகூடல்கள், பிரித்தானியா வாழ் காரைநகர் மக்களால் நடாத்தப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
- யாழ்ரன் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
திகதி : 10 – 06 – 2023
நேரம் : மாலை 6 முதல் இரவு 12 மணிவரை
இடம் : Bennets End Community Centre, Gatecroft, Hemel Hempstead, HP3 9LZ
அனுமதி : தனிநபர் 15.00, குடும்பத்திற்கு 40.00
2. பிரித்தானியா வாழ் களபூமி மக்களின் ஒன்றுகூடல்
திகதி : 08 – 07 – 2023
நேரம் : காலை 10.30 முதல் மாலை 6.30 மணிவரை
அனுமதி : இலவசம்
வேறு ஏதாவது ஒன்று கூடல்கள் ஒழுக்கமைக்கப்பட்டு நடத்தப்படுமாயின், அது பற்றிய விபரங்களை எம்முடன் பகிர்ந்தால். அவையும் இங்கே பிரசுரிக்கப்படும்.
காரை சங்கமம் 2023
எமது சங்க சங்கமம் 2023 நிகழ்வு ஒழுக்கமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. மிகவிரைவில் அதுபற்றிய தகவல்கள் தங்களை நாடி வர இருக்கின்றன. குறிப்பாக பலரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவு செய்யும் முகமாக, இந்த முறை எமது சங்கமம் நிகழ்வு தென் இலண்டனில் நடைபெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
