கொரனா (COVID – 19) வைரஸ் உலகம் முழுவதும் நோயாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்துவது மாத்திரமல்லாது, பொருளாதார ரீதியாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. நோய்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நாளாந்த வருமானத்தில் வாழ்வை கொண்டு நடாத்திய வறுமைக் கோட்டிற்கு கீழ்பட்டவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். உலகின் பொருளாதார ரீதியாக பலம்வாய்ந்த நாடுகள் கூட, இவ்வைரஸினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றன.


இது எமது ஊரான காரைநகரையும் விட்டு வைக்கவில்லை. காரைநகர் மக்கள் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என காரைநகர் பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கமும், காரைநகர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தன்னாலான முயற்சியை செய்ய முடிவு செய்துள்ளது.


அதற்கமைய 10 லட்சம் ரூபா பெறுமதியிலான பொருட்களை முதற்கட்டமாக காரைநகரில் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.


காரைநகர் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலுக்கு அமைய, வாழ்வாதார உதவி தேவைப்படும் மக்களுக்கான உதவி வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் காரைநகர் அபிவிருத்தி சபையால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


அதேநேரம் காரைநகர் மக்களுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகளை வழங்கிவரும், சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதனுக்கு எமது சபை மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.


நன்றி

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்


குறிப்பு :

அன்பான உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மக்களே,

கொரனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெற தாங்கள் வசிக்கும் நாடுகளின் அவசரகால விதிமுறைகளை கடைபிடித்து, குறிப்பாக வீட்டிலேயே இருந்து, நோய் பரம்பலை தவிர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.