மீண்டும் வன்னியில் பார்வை  கொடுத்தது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் .

 

பெனிபெனியாய் விழுந்தது,  கண்மணியில் ஒளிர்ந்தது!!!

 

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின், காரை மண்ணைத் தாண்டிய சேவைகளில் மீண்டும் ஒரு மைல் கல்லாக தடம் பதிக்கிறது முல்லைத்தீவு மக்களுக்கான கண்படர் அகற்றல் சிகிச்சை(Cataract Surgery ).
வவுனியா அரசு வைத்தியசாலையில் கடந்த வைகாசி 31ம் திகதி முதல் ஆனி 4ம் திகதிவரை நடைபெற்ற கண்படர் அகற்றல் சிகிச்சை முகாமில்  500 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும், கண்படர்  நோயினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு , மன்னார் , கிளிநொச்சி , வவுனியா ஆகிய இடங்களில் வாழும் மக்களுக்கான  சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. இதில் முல்லைத்தீவு மாவட்த்தில் தெரிவு செய்யப்பட்ட 100 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான மேற்படி சிகிச்சையை பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் நிதியுதவி வழங்கி நிறைவேற்றியுள்ளது. இந்த நிதியானது பிரித்தானியாவில் உள்ள எமது காரைமண் சார்ந்த வர்த்தக நிறுவனங்களில் உண்டியல்கள் மூலம் பெனிபெனியாய் சேர்க்கப்பட்ட பணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடையம். இப்படி சேகரிக்கப்பட்ட பணம் மூலம் இது  இரண்டாவது தடவையாக வன்னியில் மேற்கொள்ளப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான சேவையாகும். முதல் முறையாக கடந்த வருடம் ஆடி மாதம் கிளிநொச்சியில் 100 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு இச்சிகிச்சை அளிக்கப்பட்டது.
                                                         இதுவரை காலமும் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்  பெனிபெனியாய் சேகரித்த பணத்தில் இதுவரைகாலமும் ஒரு மில்லியன் ரூபாய்களை(£5,500.00) வன்னிப்பகுதியில்  சுகாதார சேவைக்கென வழங்கியுள்ளது.
மிகுதி இடங்களில் இருந்து சிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு தொண்டு அமைப்புக்கள் நிதியுதவி வழங்கி இச்சிகிச்சையை நிறைவேற்றியுள்ளன.
    இச்சேவையினை மிகுந்த சிரத்தையுடன் செய்து தந்துதவிய லண்டன் சைவமுன்னேற்ற சங்கத்தின் கிளையான அறிவொளி வளையத்திற்கு எமது மன்றம் நன்றிகளையும் , பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றது. அத்துடன் இதில் கடின ஒத்துழைப்பு வழங்கிய Vision 2020 அமைப்பினருக்கும், தமது இலவச ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் எமது நன்றிகளையும் , பாராட்டையும் தெரிவித்துக்ககொள்கின்றோம்.
கீழ் காணும் காணொளி இணைப்புக்கள்  மேலதிக செய்திகளை உங்களுக்குக் கூறும்.

 

 

 

                 பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் காரை மண்ணைத்தாண்டிய சேவைகளில் இது ஒரு பெறுமதி மிக்க சேவையாக  கருதப்படுகின்றது.

 

      குடிசெய்வல்  என்னும் ஒருவற்குத்  தெய்வம்
      மடிதற்றுத் தான்முந் துறும்.
      குறள்  1023
நன்றி
நிர்வாகம்,
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்.
01/08/2016

Leave a Reply