எமது சங்கத்தின் அங்கத்தவராக வருவதன் மூலம், நீங்கள் உங்கள் தாய் மண்ணான காரைநகருக்கு எம்மால் செய்யப்படும் வேலைத்திட்டங்களுக்கு உங்களது பங்களிப்பை வழங்கலாம்.
எமது செயல் திட்டங்கள்
– கல்வி
– மருத்துவம்
– சமூக முன்னேற்றம்
போன்ற எண்ணக்கருக்களின் அடிப்படையில் வடிவைக்கப்படுகின்றன.
எமது திட்டங்கள் பகுதியில், மேலதிக விபரங்களை நீங்கள் காணலாம்.
நீங்கள் எமது சங்கத்தில் அங்கத்தவராக சேர விரும்பினால் கீழ்வரும் விண்ணப்ப படிவத்தை நிரப்பி எமது சங்க முகவரிக்கு அல்லது info@karainagar.org எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். தங்கள் விண்ணப்பத்தை நிர்வாகம் ஏற்றுக்கொண்டவுடன், தங்கள் அங்கத்துவ இலக்கம் நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்படும்.
அங்கத்துவ பணம் ஆறு மாத காலத்திற்கு மேலதிகமாக நிலுவையுடன் செலுத்தப்படாதிருந்தால், தங்கள் அங்கத்துவதும் நீர்த்துப்போய்விடும். தங்கள் அங்கத்துவ இலக்கமும் செல்லுபடியற்றதாகி விடும். அங்கத்துவ பணத்தினை மீள செலுத்த ஆரம்பிக்கும்போது, அங்கத்துவ விண்ணப்ப படிவத்தினை நிரப்பி எமக்கு அனுப்பி வைக்க மறக்க வேண்டாம். தங்கள் விண்ணப்பம் எமது சங்க நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, தங்களுக்கு புதிய அங்கத்துவ இலக்கம் வழங்கப்பட்டு, தங்களது புதிய அங்கத்துவம் உறுதிப்படுத்தப்படும்.
குறிப்பு : நிதியை எமக்கு வழங்குவதால் மட்டும், தங்களின் அங்கத்துவம் உறுதிப்படுத்தப்பட மாட்டாது. எமது சங்க நிர்வாகம், தங்களுடைய சங்க அங்கத்துவத்திற்கான விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்டு, அங்கத்துவ இலக்கத்தினை ( பழைய அங்கத்துவம் நீர்த்துப் போன (Cancelled) நிலையில், புதிய அங்கத்துவ இலக்கத்தினை) வழங்கும்போதே உங்களுடைய அங்கத்துவம் உறுதிப்படுத்தப்படும்.
உங்கள் அங்கத்துவ பணத்தை கீழ்வரும் இணைப்பில் PAYPAL மூலம் செலுத்தலாம்.
அல்லது, கீழ்வரும் வங்கி கணக்கு இலக்கத்திற்கு நிலையான கட்டளையை வழங்கி (Standing Order – SO ) தங்கள் அங்கத்துவ பணத்தினை செலுத்தலாம்.
SC – 30 98 71
AC – 0129 0726
Karai Welfare Society
Lloyds Bank
Please put your Membership ID or full name as reference when you set up SO, thanks