“வடக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுகான இலண்டன் இந்துக் கோவில்களின் அமைப்பின் புலமைப்பரிசில் – 2020”

திட்டத்திற்கு காரைநகரில் இருந்து தெரிவான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொறுப்பை எமது சங்கத்தை எடுக்குமாறு கோரப்பட்டது.


அதற்கமைய மாணவர்களுக்கு மாதாந்தம் LKR 3,500 ஐ மூன்று வருடங்களுக்கு வழங்க எம்மால் அனுசரணையாளர்களை ஒழுங்கமைக்க முடிந்தது.


இந்த நிதியை மாதாந்தம் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பை “காரை அபிவிருத்தி சபை” எமது சங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க செய்ய முன்வந்தது.


அதேவேளையில் காரை அபிவிருத்தி சபையின் கோரிக்கைக்கு அமைய மேலும் ஒரு மாணவரை இந்த புலமைப்பரிசில் இணைத்து மொத்தமாக 10 மாணவர்களுக்கு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


காரை அபிவிருத்தி சபையும், சுவிஸ் காரை அபிவிருத்தி சபையும் இணைந்து 12.01.2020 அன்று நடாத்திய முத்தமிழ் விழாவில் மாணவர்களுக்கு உரிய முதல்மாத கொடுப்பனவு வழங்கப்பட்டது.


புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.


மேலும் காரைநகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், முத்தமிழ் விழாவில் பரிசில் பெற்ற அணைத்து மாணவர்களுக்கும் 175 “புங்கை” மரக்கன்றுகள் எம்மால் வழங்கப்பட்டது.வழங்கப்படும் புலமைப்பரிசில் நிதியும், புங்கை மரங்களும் காரைநகரை 4 வருடத்தில் மேம்படுத்தட்டும்.