காரைநகர் சைவமகா சபை மேற்கொண்ட வாரிவளவு பெரிய அடைப்பு நாச்சிமார்குளம் உருவாக்க செயல்திட்டத்தில், பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பாரிய பங்களிப்பை வழங்கியது.

இத்திட்டத்தில் வேறுசில பிரித்தானிய வாழ் காரைநகரின் மைந்தர்களும் தமது தனிப்பட்ட பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.


இத்திட்டத்தால்

  • ஏறத்தாள 100 பரப்பில் நீர் தேக்கப்பட கூடியதாக உள்ளது.
  • அமைக்கப்பட்ட குளக்கட்டுக்கள், 45 குடும்பங்கள் மாரி காலத்தில் போக்குவரத்து செய்வதற்கான பாதையாக அமைந்து விட்டது.
  • ஏற்கெனவே வெள்ளப்பாதிப்புகளை ஏற்படுத்தி கடலில் வீணாக கலந்த 800 மீட்டர் நீளமான நீர்த்தேக்கத்தை அண்டிய கால்வாய் புனரமைப்பு செய்யப்பட்டது.
  • நீர்த்தேக்கத்தை அண்டிய 2 கேணிகள் தூர்வாரப்பட்டது, அவையாவன கல்வந்தாழ்வு முருகன் கோவில் கேணி மற்றும் கந்தர் கேணி.

இந்த திட்டத்திற்கு, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தால், £ 4551 (LKR 10,00,120), 12-10-2018 அன்று காரைநகர் சைவமகா சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


ஒரு சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன …..


அணை அமைக்கும் வேலை…..

அணையால் மறித்து சேமிக்கப்பட்ட, கடலை நோக்கி ஓடிவந்த மழைநீர்.

அமைக்கப்பட்ட அணையின் பாதுகாப்பு / பராமரிப்பு செயற்பாட்டில் உள்ளூர் மக்கள்.


குறிப்பு –

இதுவொரு மண்ணால் மற்றும் குறைந்த செலவில், இயற்கையோடு ஒற்றி உருவாக்கப்பட்ட அணை. வருடாந்த பராமரிப்பு இவ்வணைக்கு தேவைப்படும். ஏனெனில் பெய்யும் மழை அணையை கரைக்கக்கூடும். மற்றும் கடலை நோக்கிவரும் மழைநீர், மண்ணையும் இழுத்து வந்து அணையின் ஆழத்தை குறைக்க கூடும். காரைநகர் சைவ மகாசபை அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது.