கிறீஸ் பம் அன்பளிப்பு

 

வடபிராந்திய போக்குவரத்துச்சபையின் காரைநகர் சாலை அலுவலகத்திற்கு லண்டன் காரைநலன்புரிச்சங்கம் சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான கிறீஸ் பம் ஒன்றினை அன்பளிப்புச் செய்துள்ளனர். இதன் காரணமாக காரைநகர் மக்களிற்கான தடையில்லாத சீரான போக்குவரத்தினை வழங்கமுடியும் என சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வளவு காலமும் நல்லநிலையில் கிறீஸ்பம் இல்லாதபடியினால் போக்குவரத்து பஸ்களை சீராக பராமரிக்க முடியாதிருந்ததனால் பஸ்கள் அடிக்கடி பழுதடைந்தது.

இதனால் மக்களிற்கான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டன. லண்டன் காரை நலன்புரிச்சங்கத்தின் இவ் அன்பளிப்பின் மூலம் இயன்றளவு தடையில்லாத சேவையை வழங்கமுடியும் என போக்குவரத்து அதிகாரிகள்தெரிவித்தனர். லண்டன் காரை நலன் புரிச்சங்கத்தினால் அன்பளிப்புச்செய்யப்பட்ட கிறீஸ் பம் இனையும் இந் நிகழ்வில் கலந்துகொண்ட நலன்புரிச்சங்க பிரதி நிதியுடன் சாலை அதிகாரிகளையும் படங்களில் காணலாம்.