
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தின் சுற்றுமதில் அமைப்பதற்கு எம்மிடம் நிதி அனுசரணையை கோரி இருந்தார்கள். இதற்கான ரூபா 8.1 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டு மேற்படி சங்கத்தினால் எமக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
எமது சங்க நிர்வாகமும் மேற்படி கோரிக்கையை ஏற்று எமது சங்க நிதியில் இருந்து ரூபா 2 மில்லியன் இனை வழங்கவும், மிகுதி ரூபா 6.1 மில்லியனினை மேற்படி கல்லூரியின் பழைய மாணவர்களிடமும், காரைநகர் மக்களிடமும் இருந்து சேகரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கமைய முதல் கட்டமாக ரூபா 2 மில்லியன் முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.

பழைய மாணவர்களும், காரைநகர் மக்களும் கீழ்வரும் இணைப்பில் சென்று தங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
மேற்படி நிதி சேகரிப்பு 25/09/2023 திகதியுடன் முடிவுறுத்த இருக்கின்றோம். எனவே தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கி மேற்படி செயல்திட்டத்தை நிறைவு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்படி மதில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளின் நிழல்கள்.






மேற்படி மதில் கட்டுமானத்தின் நிகழ்வுகளின் நிழல்கள்.







மேற்படி நிதி சேகரிப்பு, குறிப்பிட்ட காலத்திற்குள், பழைய மாணவர்களிடமிருந்து சேகரிக்க முடியாமல் இருப்பதால், மேற்படி செயல்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு கோரிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்படி நிதி சேகரிப்பு 25/09/2023 திகதியுடன் முடிவுறுத்த இருக்கின்றோம். எனவே தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கி மேற்படி செயல்திட்டத்தை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.