kp new ad

காரைநகருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பெரிய கேள்வி ….

எமது சங்கத்தால் காரைநகரின் இளையோருடன் இணைந்து காரைநகருக்கு தேவையானவற்றை பின்வரும் முக்கிய விடய தானங்களில் , காரைநகர் மக்களுக்கு காட்சிப்படுத்த உள்ளோம்.



மேற்படி விடய தானங்கள் தொடர்பாக நிகழ்வு தினத்தில் பின்வருவன காரைநகர் வாழ் மக்களுக்கும், மாணவர்களுக்கும் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளன.


மேலும் எமது நிகழ்வு தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்தும் முகமாக கீழ்வரும் தலைப்புகளில் கட்டுரை மற்றும் செயல்திட்ட போட்டிகள் நடாத்தப்பட இருக்கின்றன. இப்போட்டிகள் சாதாரண தர மாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்கள் எனும் இரு பிரிவுகளில் நடைபெறும். இலங்கையின் எப்பாகத்தில் இருந்தாலும், காரைநகரின் மைந்தர்கள் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.

கட்டுரைகளை கோவளம் விளையாட்டு கழகத்திற்கு 31/12/2024 இற்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

செயல்திட்ட போட்டியில் கலந்து கொள்ள இருப்போர், மேற்படி கோவளம் விளையாட்டு கழகத்துடன் 31/12/2024 இற்கு முன்பாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பெறுமதி மிக்க பரிசுகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெறுவோருக்கு கிடைக்கும். தகுதியான மேலதிக ஐந்து போட்டியார்களும் பெறுமதியான பரிசில்களை பெற்றுக் கொள்ள இருக்கிறார்கள்.


எமது நிகழ்வானது முழு நாள் நிகழ்வாக இருக்கும்.

இதற்கான நிதி அனுசரணையை வேண்டி நிற்கின்றோம்.

வியாபார நிறுவனங்களும் தமது வியாபாரங்களுக்கான விளம்பரங்களை உரிய தரப்பினரிடம் தொடர்பு கொள்வது மூலம் செய்து கொள்ள முடியும்.