
காரைநகர் பிரதேச வைத்தியரின் கோரிக்கைக்கு இணங்க, காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கத்தின் வழிநடத்தலில், எமது சங்கத்தினால் திருத்த வேலைகள் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன.
திருத்த வேலைகள் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள் நோயாளர் பாவனைக்கு இன்று திறந்து விடப்பட்டது. இதில் வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர் நலன்புரிச்சங்க பிரதிநிதிகள் மற்றும் எமது சங்க தலைவர், மற்றும் பொருளாளர் என்போர் கலந்து கொண்டனர்.
மேலும் சில திருத்த வேலைகளை செய்து தருமாறு, கோரிக்கை எம்மை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. எமது உண்டியல் நிதியை சேகரிக்க ஓத்த்துழைப்பு வழங்கி, மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.




