கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 வது ஆண்டு விழா

 

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ஆதரவில் ஞாயிற்றுக்கிழமை, 23rd  June  அன்று பிரித்தானியா, வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய  பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ஆதரவில் நடத்தப்பட்ட இவ்விழா பாடசாலையின் சாதனைகளை நினைவுகூருவதுடன் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்தினையும் கொண்டதாக அமைந்திருந்தது.

விழா மாலை 06:15 மணியளவில் சங்கத் தலைவர் பரமநாதர் தவராஜா தலைமையில் ஆரம்பமானது. ஆதிசங்கர் தயானந்தா, பிரவீனா ரமேஷ் தொகுத்து வழங்க, பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்த ஓய்வு பெற்ற ஆசிரியை புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன், மற்றும் கல்லூரியின் ஸ்தாபகர் பெரியார் முத்து சயம்பு ஐயா அவர்களின் பூட்டன் பூட்டி திரு, திருமதி G .ரமேஷ் , மேலும் கல்லூரியை மூன்று சகாப்தங்களுக்கு மேல் திறம்பட ஆத்மார்த்தமாக வழிநடத்திய கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் புதல்வியும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் பிதாமகன் கலாநிதி சாபதி சபாரட்ணம் அவர்களின் மனைவியுமான திருமதி மங்கை சபாரட்ணம் அவர்களும் மங்கள விளக்கேற்ற , சைவமணி,சித்தாந்த செம்மல், செஞ்சொல் வாரதி , வித்துவான் மு.சபாரட்ணம் அவர்களின் புதல்வன் பாலகிரிஷ்ணன் சபாரட்ணம் அவர்கள் தேவாரம் பாடி விழாவினை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தனர்.

மேற்படி விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்கத்தின் தலைவருமாகியதிரு.அ.செல்வச்சந்திரன்(நேரு மாஸ்ரர்), பாடசihலையின் முன்னாள் ஆசிரியையும் நிர்வாகசபை உறுப்பினருமாகிய திருமதி .செல்வநாயகி துரைராஜசிங்கம் , பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், பிரபல ஊடகவியலாளருமான திரு.இளையதம்பி தயானாந்தா, பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் சார்பில் உப-பொருளாளர் திரு.ந.பிரகலாதீஸ்வரன், கணக்காய்வாளர் திரு.கந்தப்பு அம்பலவாணர்அவர்களும், சிறப்பு  அதிதிகளாக ஓய்வுபெற்ற ஆசிரிய, ஆசிரியைகள் ,மற்றும் அவர்களுது உறவினர்களும் கலந்து கொண்டனர்.

 

”கரிஷ் மெலோடிஸ் இன்னிசை குழுவினரின்” இதமான மெல்லிசைப் பாடல்களுடன் விழா நிகழ்வுகள் ஆரம்பமானது. அதனையடுத்து தலைவர் உரையாற்றுகையில், அனைவரயும் வரவேற்றுக்கொண்டு, கல்லூரி வரலாறு, மற்றும் அதிபர்களாக, ஆசிரியர்களாக கடமை ஆற்றியவர்கள் பற்றியும் விழா நேரத்தை கருத்தில் கொண்டு சிறு குறிப்புகளுடன் எடுத்துரைத்தார். 125 வருட வரலாற்றை சொல்வதற்கு ஒரு மேடை காணாது என்றும் குறிப்பிட்டு, பெற்ற தாயையும், பிறந்த பொன் ஊரையும், கற்ற பாடசாலை இ கல்லூரிகளை மறந்தவர்கள் செய்நன்றி மறந்தவர்கள் என்றும், இவர்கள் வாழ்க்கையின் எந்த உச்சிக்கு போனாலும் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களே என்று குறிப்பிட்டார்.

 

மேலும் தலைவர் உரையில், இந்த நிகழ்வுக்கு சங்கம் தற்பொழுது பிருத்தானியாவில் வாழும் ஆசிரிய ஆசிரியைகள், மற்றும் அதிபர்கள், இவர்களின் உறவினர்கள் அனைவைரையும் வரவேற்று அவர்களுக்கு ஒரு விருது வழங்கி கெளரவிக்கு முகமாகவே இதனை சங்கம் முன்னெடுத்ததாக குறிப்பிட்டார். மேலும் தன் உரையில், இங்கு வாழும் ஆசிரய, ஆசிரியைகளையோ , அல்லது அவர்களது உறவினர்களையோ சங்கம் மேற்படி விழாவிற்கு அழைப்பு விடுக்க தவறியிருப்பின், நேர்முகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

 

அடுத்து உரையாற்றிய பிரதம விருந்தினர் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி புலவர் .பூரணம் ஏனதிநாதன் அவர்கள் தனது உரையில் 1888 இல் இருந்து இன்றுவரை மிக அழகாக , ஆழுமையாக, அன்பாக , அர்த்தமுடன் வீற்றிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்.

 

அடுத்து விழாவில்;, பிரித்தானியா வானொலி, தொலைக்காட்சி ஊடகவியாளரும் கல்விமான்களும் பங்குபற்றிய பழைய மாணவர்கள் தாயகக் கல்வியில் நன்றி மறந்தவர்களா? இல்லையா? என்னும் பொருளில் நடைபெற்ற பட்டி மன்றத்திற்கு பாடசாலையின் முன்ளாள் அதிபர், அமரர்.கவிஞர்.கலாநிதி.காரை.சுந்தரம்பிள்ளை அவர்களின் புதல்வியும் யாழ். பல்கலைக்கழகப் பட்டதாரியுமான திருமதி.மாதவி சிவலீலன் நடுவராக பணியாற்றினார். காரை வைரஸ் நடனக் குழுவினரின் நாட்டிய நாடகமும் சபையோரின் வரவேற்பைப் பெற்றிருந்தது.

 

காரைநகரின் எல்லாப் பாகத்திலிருந்தும் மருத்துவர்கள், பொறியியாலளர்கள், கணக்காளர்கள், கல்வியாளாளர்கள் எனப்பல கல்விமான்களை உருவாக்கி கீர்த்திமிகு சாதனைகள் படைத்த காரைநகரின் கலங்கரை விளக்கமான கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125 வது ஆண்டு கொண்டாட்டத்தின் முதல் விழாவாக பிரித்தானியாவில் அரங்கேறிய இவ்விழா வெற்றிவிழாவாக இனிதே நிறைவடைந்துள்ளது.