Proposals

காரைநகர் பிரதேச ஒருங்கிணைந்த அபிவிருத்திக்கான முன்மொழிவுகள்.

01. கல்வி

 01. பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்
 1991ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வின் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்.
1. 
தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாலயம்.
2. 
வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம்.
3. 
காரைநகர் கிழக்கு அ. மி. . . பாடசாலை

 4. வலந்தலை தெற்கு அ. மி. . . பாடசாலை
 5. இலகடி இந்து தமிழக்; கலவன் பாடசாலை �
6. 
ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை

 இப்பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலை சூழலில் வாழும் சிறார்களின் கல்வித்தேவைகள் இலகுவில் பூர்த்தி செய்யப்படுவதுடன் மீள்குடியேற்றத்திற்க்கும் அப்பிரதேசம் முதன்மை பெறவும் வழி செய்தல்.

02. கோட்டக் கல்வி அலுவலகம்

 வலயக் கல்விப் பணிமணைக்கு பல இன்னல்களின் மத்தியில் தம் கடமைகளை நிறை வேற்ற செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பொதுமக்களின் நலன்கருதி கோட்டக்கல்விப் பணிமனை ஒன்றை காரைநகருக்கு என தனியாக ஆரம்பித்தல்

 03. ஆளணி

 1. பாடசாலை ஆளணி தேவைப்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டு கல்வி அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஆளணி தேவைகள் பூர்த்தி செய்யதல்.
2. 
ஆசிரிய ஆளணித் தேவைகளை தற்போதுள்ள வலய நிருவாக நடைமுறையில் நிறைவு செய்வதிலுள்ள இடர்ப்பாடுகளை போக்கும் முகமாக மாகாண மாவட்ட அலுவலர்களுடன் கலந்துரையாடி விசேட அலுவலக நடைமுறை மூலம் தேவையான ஆளணியினரைப் பெற்றுக் கொள்ளல்.

04. பௌதீக வள தேவைப்பாடுகள்

 1. பாடசாலைகளுக்குத் தேவையான கட்டிடங்கள், கட்டிடத்திருத்தங்கள் தொடர்பாக மதிப்பீடு செய்து முன்னுரிமைப்படுத்தி அரசு, சர்வதேச உள்ளுர் தொண்டர் நிறுவனங்கள், நலன் விரும்பும் அமைப்புக்கள், நலன்விரும்பிகளிடம் பெற்றுக் கொடுத்தல்.
2. 
குடிநீரை இலவசமாகப் பெற்றுக்கொடுத்தல்.

05. கல்வி அபிவிருத்தி

 1. தற்போது உள்ள ஆய்வு கூடங்கள், கணனிகள் ஆகியவற்றின்  உச்சப்பயனை உறுதிப்படுத்தல் தேவைப்படும் இடத்து அபிவிருத்தி செய்தல்.
2. 
நவீன கற்பித்தல் உபகரணங்கள் துணைச்சாதனங்கள் பெற்றுக் கொடுத்தல்.
3. 
இணைப்பாடவிதான மேம்பாட்டிற்கான வளவாளர் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தலும் உபகரணங்கள் வழங்குதலும்.

06. அடைவுமட்டத்தை அதிகரித்தல்.

 01. பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அறிந்து மேம்படுத்தும் வகையில் பாடரீதியான விசேட செயற்றிட்டங்களை அறிமுகம் செய்தல்.
02. 
பாடசாலை ஆளனியினர் வழங்கப்பட்டுள்ளன வளங்களின் உச்சப்பயன்பாட்டின் மூலம் மாணவர் கல்வி மேம்பாட்டிற்குப் பணியாற்றல்.
03. 
பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் பாடசாலையுடன் இணைதந்து செயற்படல்

 04. கல்வித்திணைக்கள அலுவலர்களின் பயனுறு மேற்பார்வை, வழிகாட்டல்.

07. பாடசாலை பேரூந்து சேவை

 1. ஒரு பேரூந்து துறைமுகத்தில் புறப்பட்டு தோப்புக்காடு கிராமத்திலுள்ள மாணவர்களை ஏற்றி கரையோர வீதி ஊடாக பாலாவோடை, திக்கரை, வளுப்போடை, ஊரி ஊடாக சுந்தர மூர்த்தி நாயனார் வித்தியாலயம், கலாநிதி ஆ. தியாகாராசா மத்திய மகாவித்தியாலயத்திற்கும் ஏற்றிச்செல்லலும், மீள்ஏற்றிச் செல்லலும்.
2. 
மற்றைய பேரூந்து துறைமுகத்தில் புறப்பட்டு பலுகாடு, கருங்காலி, வாரிவளவு, கோவளம், கிராம மாணவர்களை யாழ்ரன் கல்லூரிக்கு ஏற்றிச்செல்லலும், மீள்ஏற்றிச் செல்லலும்.
3. 
மாணவருக்கு பேரூந்துக்கான பருவச்சீட்டுக்களை இலகுவாக பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தல்

08. பாடசாலை வரலாறு 

தற்போது கிடைக்கக் கூடிய பாடசாலை வரலாறு சம்பந்தமான ஆவணங்கள், வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள், அறிஞர்களின் துணையுடன் பாடசாலைகள் தமது வரலாற்றை ஆவணமாக்குதல்.

09. கவினுறு நிலை ஏற்படுத்தல்.

 1. நிழல் மரங்கள் நாட்டுதல், பூங்காக்கள் அமைத்தல் மூலம் கற்றலுக்கான கவினுறு நிலையை பாடசாலைகளில் ஏற்படுத்தல்

02. இளைஞர்:-

 1. கிராமத்தின் அனைத்து இளைஞர்களையும் எண்ணிக்கையின் அடிப்படையில் குறிச்சிகளை தனித்தும், இணைத்தும் இளைஞர் அமைப்புக்குள் உள்வாங்குதல்.
2. 
இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்வு தொடர்பாக ஆலோசனைகளும், வழிகாட்டலும் வழங்கல்.
3. 
அமரார். திரு. தியாகராசா மகேஸ்வரன் அவர்களால்  வலந்தலைச் சந்தியில் அமைக்கப்பட்ட  கட்டிடங்களைப்  பயன்படுத்தி எதிர்கால தொழில் வாய்ப்புக்கு முகம் கொடுக்கக் கூடியதான பொருத்தமான பயிற்சிகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கி, சான்றிதழ் வழங்கி, தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக் கொள்ள ஆவன செய்தல்.

03. நீர்

 1. நீரியியலாளரின் சேவை மூலம் கிராமத்தின் நன் நீர்வளங்களை அடையாளங்காணல்.நீடித்து இருப்;பதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல், அறிக்கைப்படுத்தல், அமுல்படுத்தல்.
2. 
கடலுக்கு வீணே சென்றடையும் மழைநீரை அடையாளங் காணப்படும் இடங்களில் தேக்குதல்.
3. 
வயல்கள் ஊடாக செல்லும் வாயக்;கால்களில் மழைநீரை விவசாய போக்குவரத்துக்களுக்கு  தடங்கல் ஏற்படாதவாறு மழைக்காலங்களில் தேக்கல்.
4. 
கடந்த காலங்களில் குடிநீர், குளிநீர் கிணறுகளாக இருந்தவைகளை அடையாளங் காணல் அபிவிருத்தி செய்தல்.
5. 
மூடப்பட்ட, கைவிடப்பட்ட, பாவனையில் உள்ள குளங்கள், கேணிகள் அடையாளங் காணப்பட்டு அபிவிருத்தி செய்தல்.
6. 
கூரைகளில் இருந்து மழைநீரை மக்கள் தமது கிணறுகளுக்குள் அனுப்புவதற்கான ஆலோசனைகள் நிதி உதவி வழங்குதல்.
7. 
வோணன் அணைக்கட்டு புனர்நிர்மாணம்.
8. 
மண் றோட்டை கசூரினா கடற்கரை வரை அமைத்தல்.
9. 
கடல் நீர் உள்ளே வரும் சாத்தியமான இடங்களில் தடுப்புச் சுவர்கள், அணைகள் ஏற்படுத்தல்.
10. 
மின்சாரம், நீர்பம்புகள் மூலம் நீரை காரைநகர் கிணறுகளில் இருந்து நீர் பெறுவதை  தவிர்த்தல்.
11. 
அளவுக்கதிகமான யூரியாவை நெல்விளைச்சலுக்கு பயன்படுத்தலை தவிர்த்தல்.
12. 
நன்னீர் உள்ள இடங்கள் இனங் காணப்பட்டு ஊரி வேறு தேவைப்படும் கிராம மக்களுக்கு நன்னீர்க் கிணறுகள் அமைத்தல்.
13. 
காரை நலன்புரிச் சபையால் பார ஊர்தி கொள்கலன் மூலம் வழங்கப்படும் நீரினை சிறந்த முறையில் பயன்படுத்துதல்.
14. 
காரைநகரில் உள்ள கிணறுகள் மூலம் குழாய்;நீர் வழங்கும் திட்டம் இரண்டு கட்டங்களில் (சுப்பிரமணியம்வீதி, ஆலங்கன்று) தோல்வியடைந்துள்ளதுமாத்திரமன்றி அதனை சூழவுள்ள கிணறுகளும் உவர்நீராக மாறியமையால் குழாய் மூலம் நீர் வழங்கும் திட்டம் ஏற்படுத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்

 15. நீர் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தல்.

04. 
பொருளாதாரம்:-

1. விவசாயம்.

 1. விவசாய விரிவாக்க பணிமனையின் அதி உயர் சேவையைப் பெற்றுக் கொள்ளல்.
2. 
உயர் விளைச்சல் நெல் இனங்களை அறிமுகப்படுத்தல்.
3. 
பயன்படுத்தக் கூடியவாறு உள்ள வயல்நிலங்களை பயிhச்;செய்கைக்கு உட்படுத்தல்.
4. 
நவீன விவசாய முறைகளை விவசாயத்திற்கு அறிமுகம் செய்தல்.
5. 
சிறு தானியப் பயிரிடலை ஊக்குவித்தல்.

2. மீன்பிடி

 1. செயற்படும் மீனவ சங்கங்களை வலுவூட்டல்.
2. 
காப்புறுதி, ஆபத்துக்கால கொடுப்பனவு போன்ற திட்டங்களை தொழிலில் ஈடுபடுவோருக்கு  அறிமுகப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள்.
3. 
அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் தொழில் நுட்பவசதிகள், உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல்.
4. 
மீன்களைப் பேணுவதற்கான குளிர்சாதன வசதிகள் ஏற்படுத்தல்.
5. 
மீன்களைச் சந்தைப்படுத்துவதற்கு வாகன வசதிகளை ஏற்படுத்தல்.
6. 
வீட்டுத்திட்டங்கள் ஏற்படுத்தல்.
7. 
மீன்பிடித்தொழிலுக்கான வீதிகளை செப்பனிடல், உருவாக்குதல்.

3. குடிசைக் கைத்தொழில்

பனை அபிவிருத்தி சபை பொருட்களை வழங்கி பாவனைப்பொருட்களை கிராமமக்களை கொண்டு செய்வித்து கொள்வனவு செய்யும் திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதால், அதனை அறிமுகம் செய்தல். கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் சேவையைப் பெற்றுக் கொள்ளல்.

4. தென்னை

கோவளப் பகுதியிலும் கிராமத்தின் வேறு சில இடங்களிலும் தென்னைப் பயிர்செய்கை இடப்பெயர்வுக்கு முற்பட்ட காலத்தில் வருமானம் தரும் பயிராகவும் கிராமத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் துறையாகவும் இருந்தது.  கோவளத்திலும் வேறுபகுதிகளிலும் தென்னந் தோட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் அல்லது சிறந்த முறையில் செய்கை பண்ணாமல் காணப்படுகிறது. தமது முன்னோர்களின் சொத்துக்களைப் பேணமுடியாத நிலையிலும் கையளிக்க முடியாத நிலையிலும் நாட்டின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் உள்ள உரிமையாளர்களையும் அணுகி அபிவிருத்திக்கான திட்டங்களை உருவாக்கல்.

5. கால் நடை அபிவிருத்தி

 இடப்பெயர்வுக்கு முன்னர் பெரும்பாலான இல்லங்களில் கால் நடைகள் வளர்க்கப்பட்டன.
1. 
தரவை மேய்ச்சல் நிலம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.
2. 
சிவன் கோவிலை சூழவுள்ள கோவில் காணிகள் அடைக்கப்பட்டு நல்லின புற்களை உருவாக்கி கால் நடை வளர்ப்பு ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

05. வீதிகள்

 வீதிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்
1. 
பொன்னாலைகாரைநகர் தாம் போதி வீதி. இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டு வருகின்றது.
2. 
காரைநகர் கிழக்கு வீதி A72 வீதியாக இருந்த போதிலும் A வீதிக்குரிய அகலம் கொண்டதாகவும் (24அடி) சிறந்த தரத்தினையுடையதாகவும் அமையவில்லை. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பேணப்படும் இவ்வீதி உயர்ந்த தரத்திற்கு அமைக்கப்பட்டு பேணப்படல் வேண்டும்.

3. 
காரைநகர் மேற்கு வீதி வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிருவகிக்கப்படுகின்றது     A தரத்திற்கு உயர்த்;தபடல் வேண்டும். (24அடி அகலம்) ஆலடிச்சந்தியில் இருந்து வீதிக்கு தெற்கு பக்கமாக கொங்கிறிட் கால்வாய்கள் கிழக்கு வீதியில் உள்ள குழுவி மதகு 1.5 கிலோ மீற்றர் தூரம் வரை அமைக்கப்படல் வேண்டும். ஆலடியில் இருந்து துறைமுகம் வரை மழைநீர் செல்வதற்கான கால்வாய்கள் கொங்கீறிட் முலம் சிறிய அளவில் அமைக்கப்படல் வேண்டும. சுப்பிரமணியம் வீதியில் இருந்து சின்னாலடி வரை மழைக்காலங்களில் மழைநீர் வீதியில் தேங்குவதால் சகல போக்குவரத்துக்களும் வலந்தலைச்சந்தியில் நிறுத்தப்பட்டு மழைக்காலங்களில் வருடம் தோறும் நடந்து செல்லவேண்டி உள்ளது. வீதியின் இப்பகுதி உயரமாக்கப்படல் வேண்டும். காரைநகரில் உள்ள பிரதான தொழிலான கமச் செய்கைக்குரிய இடங்களுக்கும் இப்பாதையே பயன்படுகிறது. காரைநகரில் பிடிக்கப்படும் மீன்களை வெளியே எடுத்துச்செல்வதற்கும் இப்பாதையே பயன்படுகிறது. 1ABபாடசாலை 1, I Cபாடசாலை 1,II ம் வகுதி பாடசாலை 1, IIIம் வகுதிப ;பாடசாலைகள் 7 மொத்தமாக 10 பாடசாலைகள், சுற்றியல் வைத்தியசாலை, தபாலகம், இலங்கை வங்கி, பிரதேசசபை, பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைமைப் பணிமனை, கலங்கரைவிளக்கம், கசூரினா கடற்கரை, ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம், கடற்படைத்தாளத்தின் பிரதான நுழைவாயில் என்பன இவ்வீதியில் அமைந்துள்ள. முக்கிய இடங்களாகும். .காரைநகர் கிராமத்தின் 60% நெருக்கமான குடியிருப்புக்களும் இவ்வீதியிலே அமைந்துள்ளன.காரைநகர் பேரூந்து சபையின் பேரூந்துகளும் தனியார் பேரூந்துகளும் சிற்றூர்திகளும்  சுற்றுலா பயணிகளின் ஏராளமான வாகனங்களும் இவ்வீதியைப் பயன்படுத்துகின்றன.

4. 
சுப்பிரமணியம் வீதி வயல் வெளியில் வடக்கு தெற்காக, தெற்கு வடக்காக ஓடும் வாய்க்காலுக்கு இருபுறமும் சீமெந்து சுவர் அமைக்கப்படல் வேண்டும். வாய்க்கால் ஆழமாக்கப்பட்டு அதில் பெறப்படும் மண்ணை வீதியின் கிழக்குப் புறத்தில் இட்டு வீதியின் வடக்கு தெற்கில் உள்ள பாலத்திற்கு இடைப்பட்ட பகுதி அகலமாக்கப்பட்டு பார ஊர்திகள் நிறுத்துவதற்கும், விலத்துவதற்கும், கமவேலைகள் செய்வதற்கும் ஏற்றதாக அவ்விடத்தை சீர் செய்தல்.
இவ்வாய்க்காலில் விவசாய போக்குவரத்திற்கு இடையூறின்றி இடைக்கிடை குறுக்கு சுவர் அமைத்து தண்ணீரைத் தேக்குதல்.
5. 
சத்திரந்தைகேசடை வீதி அகலமாக்கப்பட்டு தடுப்புச் சுவர்கள் அமைத்து தார் இடல்.
6. 
பெரிய மதவுவீதி, கல் ஒழுங்கைவீதி, திக்கரைவீதி, சுந்தரமூர்த்தி பாடசாலை அருகே செல்லும் வீதி, பாலாவோடை வீதி யாவும் குறிப்பிட்ட இடத்தில் தார் போடப்பட்டமை நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வீதிகள் ஊரி, தன்னை, வழுப்போடை, பாலாவோடை வரை தார் இடப்படல் வேண்டும். இவ் வீதிகள் தார் வீதிகளாக ஒன்றுக்கொன்று தொடர்பு படல் வேண்டும்.
7. 
தோப்புக்காடு கரையோர வீதி சாந்திபுரம் வரை அகலமாக்கப்பட்டு தார் இடப்படல் வேண்டும்.�
8. 
பால் குத்தி மடத்தில் இருந்து வேரப்பிட்டி கிராமத்துக்கு செல்லும் வீதி தார் இடப்படல் வேண்டும்.
9. 
கோவளம்வீதி முல்லைப்புலவில் இருந்து  கடற்கரை நோக்கியும், மயானத்தை நோக்கியும்.
10. 
சிவகாமி அம்மன் கோவில் வீதி வேதரடைப்பில் இருந்து கடற்கரை நோக்கியும்
11. 
அல்லின் வீதி வடகாட்டிலிருந்து கடற்கரை நோக்கியும்
வீதிகள் உயரமாக்கப்பட்டு மதகுகள் அமைக்கப்பட்டு தார் இடல் வேண்டும். இவ்வீதிகள் ஒன்றுக் கொன்று தொடர்புபடுத்தப்படல் வேண்டும்.
12. 
சிவன் கோவில் வீதி அகலமாக்கப்பட்டு வீதி சமிஞ்ஞைகள் அமைக்கப்படல் வேண்டும். விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய நான்கு வளைவுகளும் சீர் செய்யப்படல் வேண்டும்சிவன் கோவில் வீதி ஆரம்பத்தில் அலங்கார வளைவு சிவன் கோவிலை முதன்மைப்படுத்தி அமைத்தல் வேண்டும்.
13. 
பழைய கண்டி வீதி (சடையாளிப் பகுதியில் உயரமாக்கப்பட்டு மதகு அமைத்தல் வேண்டும்) சிவன் கோவில் வரை அகலமாக்கப்படல் வேண்டும்.�
14. 
சயம்பு வீதி சிவன் கோவில் வரை அகலமாக்கப்படல் வேண்டும்.
15. 
மண்றோட் தூம்பில் பிட்டி வரை கொண்டு செல்லப்பட வேண்டும். இருகரைகளுக்கும் கொங்கிறிற் சுவர்களமைத்து வெளியிடத்திலிருந்து கிரேசர் மண் வருவிக்கப்பட்டு அமைக்கப்பட வேண்டும். தற்பொழுது இவ் றோட் அரைத் தூரம் வரை அமைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இவ் றோட் 18 அடி அகலம் கொண்டதாக போதுமான உயரமுடையதாகவும் அமைக்கப்பட்டு கசூரினா கடற்கரைக்கும் சிவன் கோவிலுக்கும் பாவிக்கக் கூடியதான மாற்றுப் பாதையாக அமைத்தல் வேண்டும். இவ் றோட் கடல் நீர் உள்வருவதை தடை செய்யும்.
16. 
பாடசாலை வீதி பிரதேச சபையின் மேற்குப்புற எல்லை பின்நகர்த்தப்பட்டு கலாநிதி          . தியாகராசா மத்திய மகாவித்தியலாய தெற்கு பகுதி கிழக்கு எல்லை கிழக்கு நோக்கி நகர்த்தி பாடசாலை விரிவாகத்திற்கு ஏற்பாடு செய்தல்.

06. வடிகால்கள்

 காரைநகர் மேற்கு வீதி ஆலடியில் இருந்து குழுவி மதவுவரை கொங்கீறீற் வடிகால் அமைத்தல்.�
ஆலடியில் இருந்து துறைமுகம் வரையும் கரைநகர் கிழக்கு வீதியிலும் வடிகால் அமைத்தல்.
சுப்பிரமணியம் வீதி கால்வாய் கொங்கீறிற் முலம் அமைத்தல்.
முல்லைப்புலவு கால்வாய்கள் சீர் செய்தல்.

07. மதகுகள்

 1. பெரிய மதவு, குழுவி மதவுகள், சுலுசுகள் சீராக்கப்பட்டு (regulators) பேணப்படல் வேண்டும்.
2. 
பாடசாலை வீதிமொந்திபுலம்மதகு புதிதாக அமைக்கப்படல் வேண்டும்.
3. 
இடைப்பிட்டி வீதிபழைய கண்டி சந்தியில் தெற்கு நோக்கி செல்லும் வீதியில் உள்ள மதகு பெயரளவில் உண்டு. வேகமாக வரும் தண்ணீர் மெதுவாக செல்கிறது. மதகு புதிதாக அமைத்தல் வேண்டும்.
4. 
மில் வீதி, அருணாச்சல உபாத்தியார் வீதி, பயிரிக்கூடல் வீதி, களவில்பிட்டி வீதி, முதலாம்கட்டையடி வீதி, மணற்காட்டு அம்மன் கோவில் வீதி போன்ற வீதிகளின் ஆரம்பத்தில் சுற்று வீதி அகலமாக்கலை கருத்தில் கொண்டு பின் நோக்கி மதகுகள் அமைத்தல் வேண்டும்.

08. பாலங்கள்

காரைநகர் மக்களுக்கும் தீவக மக்களுக்கும் குறிப்பாக ஊர்காவற்றுறை மக்களுக்;கும் இடையே நீண்ட காலமாக உத்தியோகம், தனிப்பட்டகலாச்சாரம்வாத்தக ரீதியான தொடர்புகள் உண்டு கடந்த காலங்களில் உதவி அரசங்க அதிபர், காவல்துறை, நீதிமன்றம் போன்ற காரியாலய தேவைகளைப் பூர்த்தி செய்ய செல்ல வேண்டிய தேவை இருந்தது.தற்போது கல்வி, காவல்துறை, நீதிமன்றம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவைக்காகப் பயணிக்க வேண்டி உள்ளது.கல்வி நிருவாகிகள் அடிக்கடியும், மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்ற அதிகளவிலும் பயணங்களை மேற்கொள்கிறார்கள்.
தென் இலங்கையிலிருந்து நயினாதீவுக்கு செல்லும் யாத்திரிகள் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு வருவதற்கு 55 கிலோ மீற்றர் செல்லும் தூரத்தை 20 கீலோ மீற்றராக குறைப்பதற்கும் பெயிலிபிறிற்ஜ்  (BAILEY BRIDGE )அமைத்தல் அவசியம்.

 BAILEY BRIDGE

காரைநகர் சாந்திபுர தந்தி மூலை முனையினதும்; ஊர்காவற்துறை தம்பாட்டி முனையினதும் தூரம் 1.5 கீலோ மீற்றர். 1  கீலோ மீற்றர் 4 அடி தண்ணீர் கொண்ட ஆழமற்ற பகுதியாகவும்   1.2   கீலோ மீற்றர் 10  அடி தண்ணீர் கொண்ட ஆழமான பகுதியாகவும் உள்ளது தற்போதுள்ள துறைமுகப்பகுதியை விட ஆழம் குறைந்த பகுதியாகும். இவ்விடத்தில் பாலம் அமைப்பது பொருத்தமானதாகும்.

09. வணக்கத்தலம்

1991ம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னர் குறிச்சிகளில் இயற்கையாக மரங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வணக்கத்தலங்கள்   அடையாளப்படுத்தப்பட்டு வணக்கம் செய்வதற்கு தற்போது வசிப்பவர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கோவில்களும் வணக்கத்தலங்களும் தனிமனிதர்களின் நல்வாழ்விற்கும் , கல்வி, சமூக மேம்பாட்டிற்கும் பயன்தரு பங்களிப்பு வழங்கக் கூடியதாக அபிவிருத்தி செய்யப்பட்டு முகாமைப்படுத்தப்படுதல் வேண்டும்.

10. தொல்பொருள் இடங்கள் 

கடந்த காலங்களில் களபூமி ஆலடியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இராசாவின் தோட்டம், வியாவில் ஐயனார் கோவில், சிவன் கோவில் போன்ற இடங்களின் வரலாறுகள் நூலாக்கம் செய்தல் வேண்டும்.

11. கலாச்சார நிலையம்

 புதிதாக அமைக்கப்பட்டு வரும் காரைநகர் பிரதேச சபையில் ஒரு அறை எமது கிராமத்தின் கலாச்சார பின்னணியைப் பாதுகாப்பதற்கு ஒதுக்கப்படல் வேண்டும்.
மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக பங்களிப்புச் செய்த எமது கிராமத்தின் முன்னோர்களின் பங்களிப்புப் பற்றியும், வாழ்க்கை வரலாறு, படங்கள் என்பன பேணப்படல் வேண்டும். வானியல், சைவசமயம், கல்வி போன்ற பல துறைகளில் காத்திரமான பங்களிப்புச் செய்த பலபெரியார்கள். வாழ்ந்த வரலாறு ஆவணப்படுத்தல் இன்றி உள்ளது. கிராமத்தின் கோவில்களின் வரலாறு, பாடசாலைகளின் வரலாறு, கிராமத்தின் வரலாறுநமது ஊர் மக்களால் ஆக்கம் செய்யப்பட்ட  நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், என்பன பேணப்படல் வேண்டும். இது இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க எடுக்கும்  ஓர் முயற்சியாகும்.

12. கலாச்சார நிகழ்வுகள்

வாரிவளவு நல்லியக்க சபையினரால் நடாத்தப்பட்ட முன்பள்ளி செயற்பாடுகள் ஏனைய கல்வி விளையாட்டு செயற்பாடுகள் புனரமைக்கப்படல் வேண்டும். இச்சபை நடவடிக்கைகள் இடப்பெயர்விற்கு முன்னர் எமது சமூக வாழ்வின் மேம்பாட்டில் காத்திரமான பங்கினைப் பெற்றிருந்தது.  சிவகாமி அம்மன் கோவிலடியில்  நடைபெற்ற நாடக விழாக்கள், சிவ கௌரி சனசமூக நிலையத்தின் கலாச்சார நிகழ்வுகள்சிதம்பராமூர்த்தி கேணியடியில் நடைபெற்ற பால் முட்டி, தயிர் முட்டி போன்ற சமூக முனைப்பு பெற்ற நிகழ்ச்சிகள் புதுமைப்படுத்தப்படல்; வேண்டும்.

13. விளையாட்டுச் செயற்பாடுகள்

காரை விளையாட்டுக்கழகம் , கோவளம் விளையாட்டுக்கழகம்சோலையான் விளையாட்டுக்கழகம், களபூமி சன சமூகநிலையம்தோப்புக்காடு விளையாட்டுக்கழகம் போன்ற கழகங்களின்  செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளித்தல்.

14. மீள்நிர்மாணம்

 1. அமரர் திருமதி தங்கம்மா நடராஜா காலத்தில் சிவன் கோவில் வடக்கு வீதியில் ஓளி வீசி, மணம்வீசி, நின்ற மடத்தினைப் புதுப்பித்தல்.
2. 
கைவிடப்பட்ட வீடுகள் காணிகள் உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்டு ஒர் அமைப்பின் ஊடாக பேணப்படல் வேண்டும்.

15. தடுப்புச் சுவர்கள்

கிராமத்தின் வடக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகளில் ( குறிப்பாக ஐயனார் கோவில் பகுதியில் மண் அகழப்பட்ட இடங்களில்) கடல் நீர் உள்வருவதை தடைசெய்ய தடுப்புச்சுவர்கள் அமைத்தல்

16. மின்சாரம்

 கிராமத்தின் சகல இடங்களுக்கும். பூரணமான ( 3 Phase line ) வழங்கப்படல் வேண்டும்.

17. உதவி அரசங்க அதிபர் பணிமனை 

..அ பணிமனை பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படும் போது சகல பணிகளும் ஆற்றக்கூடியவாறு ஆளணி, வளங்கள். வழங்கப்பட்டு கிராமத்தின் வளர்ச்சியில் பங்காற்ற கூடியவாறு செயல்திறன் உள்ளதாக அமையவேண்டும்.

18. சுகாதார சேவைகள்

 தற்போதுள்ள சுகாதார சேவைகளை மேம்படுத்தல்.

19. அஞ்சல் சேவை

 தபாலகம், உபதபாலகம் என்பனவற்றின் சேவைகளை மேம்படுத்தல்.

20. இலங்கை போக்குவரத்து சபை சேவை

 .போ.ச காரைநகர் சாலையின் பேரூந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து நாட்டின் சகல பாகங்களிற்கும் பேரூந்து சேவையினை ஏற்படுத்தல். 784 இலக்க பேரூந்து சேவையை ஆரம்பித்தல்.   அலுவலக பாடசாலை நேரங்களில் யாழ்ப்பாணத்திற்கான கடுகதி சேவை என்பனவற்றை மீளஆரம்பித்தல்.

21. பலநோக்கு கூட்டுறவு சங்கம்

 பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களின் வாழ்வியல் நடவடிக்கைகளை மேம்படுத்தக் கூடியவாறு வலுவ+ட்டப்படல் வேண்டும்.

22. சீநோர் திட்டம்

 கடந்த கால அனர்த்ததால் அழிந்து போன சீநோர் திட்டத்தை அரசினதும் நோர்வே நாட்டினதும் அனுசரணையுடன் மீண்டும் இயங்க வைத்தல், மூலம் தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி, துறைமுகப்பகுதியை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரலாம்.

23. கசூரினா கடற்கரை

கசூரினா கடற்கரை சுற்றுலா இடமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். என்னும் சிந்தனைகள் 1980ல் ஆரம்பிக்கப்பட்டு வலுவான கருத்தொற்றுமை இன்மை காரணமாக கைவிடப்பட்டது. தற்போது இதன் அபிவிருத்தி தொடர்பாகப் பேசப்படுகின்றது. அபிவிருத்தியின் சாதகமான பாதகமான அம்சங்கள் ஆராயப்படல் வேண்டும்.

24. பொதுச்சேவை

 1. நூலகங்கள், வாசிக சாலைகள், சனசமூக நிலையங்கள்   1991ம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னர் கிராமத்தின் சகல இடங்களிலும் மேற்கூறப்பட்ட சமூக அமைப்புக்கள் செயற்பட்டு வந்தன. மாலை நேரங்களில் இளைஞர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டனர். முதியோர்கள்  சமயநிகழ்வுகள், பத்திரி;கை வாசித்தல் என்பனவற்றில் ஈடுபட்டனர். மகளிர் தையல் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இவைகளின் செயற்பாட்டினை மீள ஆரம்பித்தல்.

 2. மரம் நடுகைபசுமை இயக்கம்
 இருக்கின்ற மரங்களைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.  கசூரினா கடற்கரையில் கசூரினா மரங்கள் நடல்,   கசூரினா கடற்கரையில் கசூரினா மரங்களை வெட்டல் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தல்.    கசூரினா கடற்கரைக்கு செல்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுவரும் வீதியின் இரு புறமும்  வீதியில் இருந்து 10 அடி தூரத்திற்கு அப்பால் சவுக்கு மரங்கள் கடற்கரை வரை நாட்டப்படல் வேண்டும்.    வீதியின் இரு புறமும் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான இடத்தில் தூரத்திற்கு ஒன்றாக நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட வேண்டும்.
சிவன் கோவிலுக்கு செல்லும் தரவைக்குளத்தின் வடக்கு வீதியில் நாட்டப்பட்ட பனங்கன்றுகள் திருவிழாக்காலங்களில் வாகனங்கள் விலத்திச்செல்வதற்கும்., பாதசாரிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியனவாக வளர்ந்து வருகின்றது இவை யாவும் அகற்றப்பட்டு கூடுகள் அமைக்கப்பட்டு நிழல்தரு பூமரங்கள் நாட்டப்படல் வேண்டும். இம்மரங்களும், பூக்களும், குளமும், அழகான காட்சியாக அமையும்.       காட்டுநெருப்பு, சித்திரவேம்பு, சக்கரைவேம்பு, ஆலமரம் என்பன நாட்டலாம்   பாடசாலைகள் அரச அலுவலகங்கள் வணக்கஸ்தலங்களில் மரங்கள் நாட்டல்.

3. மயானங்கள் அபிவிருத்தி

சாம்பலோடை, ஆலங்கன்று, நீலன்காடு, தில்லை மயானங்களில் தகனம் செய்வதற்கான மேடைகள் அமைத்தல். கிணறுகள,; மண்டபங்கள் அமைத்தல்புனரமைத்தல.; நிழல் தரும் மரங்கள் நாட்டல.;

25. கிராமத்தின் வரலாறு

 கிராமம் எவ்வாறு உருவானது மக்கள் எவ்விடத்தில் இருந்து வந்து குடியேறினர்.  1991 ம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னரான பின்னரான நிகழ்வுகள் போன்ற விபரங்களை ஆவணமாக்கல்.  1970 -1980 ஆண்டுகளின் வாக்காளர் இடாப்பினை வெப்பதளத்தில் இடம்பெறச் செய்தல்.   கிராமத்தின் சகல விபரங்களையும் உள்ளடக்கிய சற்லைற் (Satellite) படங்கள் தற்போது ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரம் பெற்ற அலுவலர்களின் அனுமதியைப் பெற்று அதனை காரைநகர் கிராமத்தின் செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளில் செயற்படும் வெப்ப தள (Web Site) உரிமையாளர்கள் தமது வெப்பத்தளங்களில் பார்வையிடக்கூடிய ஏற்பாட்டினை செய்தல் வேண்டும்.

எலிபன் ஸ்ரோன்தீவு (Elphinstone) அமெரிக்கத் தேசம் உருவாக்கம் பெற்ற பின்னர் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருபவர்களின் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் இடமாக இத்தீவு விளங்கியது. இத்தீவின் அலுவலகத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்களின் பெயர்கள், அவர்களுடைய ஊர்கள், அவர்கள் வந்து சேர்ந்த காலம் என்பன பதியப்பட்ட பின்னரே இவர்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்பட்டனர். குடியேறிய இடங்களின் விபரங்களும் இங்கு பேணப்படடுள்ளது  இப்போது இத்தீவு தொல்பொருள்நிலையமாக உள்ளது. இங்கு தொங்கும் விளம்பரப்பலகையில் ஐரோப்பாவில் இருந்து வரும் இளைய தலைமுறையினர் யாராவது தங்கள் மூதாதையர்களின் இருப்பிடங்களைப் பற்றி அறிய, சந்திக்க விரும்பின் அவர்கள்ஊர்களிலிருந்து புறப்பட்ட காலம், புறப்பட்ட ஊர், பெயர் போன்ற விபரங்களை சமர்ப்பிப்பின் தமது மூதாதையர்கள் அமெரிக்காவில் வசிக்கும் இடத்தினை அறிந்து அவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இத்தீவில் மேற்கொள்ளப்படும்.  எமது அடுத்த தலைமுறையினர் தமது மூதாதையர் வாழ்ந்த இடம் தமது உறவுகள் வாழ்கின்ற இடம் போன்றவற்றினை அறிந்து தங்கள் உறவுகள் நீடித்து நிலைத்து நிற்பதற்கு மேற்குறிப்பிட்ட அல்லது வேறு ஏதாவது வழிமுறைகளைக் கண்டறிந்து வெப்பதளங்களில் அறிமுகம் செய்தல் வேண்டும்.   

அன்புடையீர்:

இது ஒர் ஆரம்ப ஆவணம் சேர்க்கப்பட  வேண்டியவை திருத்தப்பட வேண்டியவை நீக்கப்பட வேண்டியவை நிறைய உண்டு ஆலோசனைகள் ஆவணத்தை செம்மைப்படுத்தும்

Have  a  Picture  Before  Have  a  Palace

 அன்புடன்                          தொலைநகல்
எஸ். கே. சதாசிவம்.        024. 2222466
32,A.
நகரசபை விடுதி      மின்னஞ்சல் முகவரி

குருமன்காடு,                   satha.sham@yahoo.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

மன்னார் வீதி,                 தொலைபேசி 0775411722
வவுனியா.
22.06.2010  

Last Updated (Tuesday, 26 October 2010 17:16)