KWS’s first Sport Tournament and Family Fun day took place on Sunday 15th July 2012, at the Rosehill Recreation Ground, Sutton, with about 800 people attending. A wide range of activities were took place for all ages. The children enjoyed taking part in the field games and older youth played football, cricket and tug of war.
The highlight of the day was mouth-watering food. Selections of food were offered including seafood Kool, B & Q, Kottu Roti. Catering provided by Casuarina Restaurant.
All participants awarded with medals and trophies. Here are some photos of the event.
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் முதன்முறையாக பெருமையுடன் முன்னெடுத்த விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல் நேற்றைய தினம் (15 -07 -2012 ) ROSEHILL RECREATION GROUND ,ROSEHILL , SUTTON , SM1 3EW எனும் இடத்தில் அமைத்துள்ள திறந்த வெளி மைதானத்தில் வெகு விமைர்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.
இந்தநிகழ்வில் 800 இக்கும் மேற்பட்ட பிருத்தானிய காரை மக்கள் சங்கமித்திருந்தார்கள். நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு .ஆறுமுகம் நல்லைநாதன் (துணைப் பேராசிரியர்)அவர்களும், கௌரவ விருந்தினராக திருS.K. சதாசிவம் மாஸ்டர் ( இளைப்பாறிய அதிபர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யோகி ராம் சுந்தர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள், புங்குடுதீவு நலன் புரிச் சங்க தலைவர் திரு கருணைலிங்கம், எங்கள் பிரபல ஊடகவியலாளர் திரு.இளயதம்பி தயானந்தா மற்றும் திரு S .கணநாதன் ஆகியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
மேற்படி நிகழ்வு காலை 10 :30 மணியளவில் ஆரம்பமாகியது. முதலில் உதைபந்தாட்ட போட்டியுடன் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. தொடர்ந்து துடுப்பாட்டம், ஓட்டப்போட்டிகள் ,தடை ஓட்டம் , கயிறு இழுத்தல் என வயது அடிப்படையில் போட்டிகள் சுவாரசியமாகவும்,ஆர்வத்துடனும் நடைபெற்றது. 200 இக்கும்மேற்பட்ட இளம் சிறுவர் சிறுமியர் போட்டிகளில் பங்குபற்றினர். பெரியோர்களுக்கான சாக்கோட்டம் , கயிறு இழுத்தல் போட்டிகள் மைதானத்தை களைகட்ட வைத்தது.
நிகழ்வில் மற்றொரு புறம் கூழ்,கொத்துரொட்டி,BBQ என்று இன்னும் பல உணவு வகைகள் சுடச் சுட உடனுக்குடன் தயார் செய்து வழங்கியமை மக்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதுமட்டுமன்றி குழந்தைகளுக்கான BOUNCY CARSTLE , FACE PAINTING மற்றும் அவர்களுக்கான சிறு சிறு விளையாட்டு பொருட்களுடன் கூடிய POPCORN ,CANDY FLOSS (தும்பு முட்டாஸ் ), ICE CREAM போன்ற கடைகள் பிருத்தானிய வாழ் காரை மக்களை மீண்டும் காரைநகருக்கே அழைத்து சென்றிருந்தது.
இறுதி நிகழ்வாக அனைத்து விளையாட்டுக்களிலும் பங்கு பற்றி வெற்றி பெற்ற குழு மற்றும் தனிப்பட்ட வெற்றியாலார்களுக்கு பதக்கங்கள் (MEDALS ), வெற்றிக்கிண்ணங்கள் (TROPHYS ) மற்றும் பிருத்தானிய காரை நலன் புரிச்சங்கதினரின் சான்றிதள்களும் வழங்கப்பட்டன .
இவ்விழாவிலிருந்து சில புகைப்படங்களைக் கீழே காணலாம்.