Queen Elizabeth II and her consort the Duke of Edinburgh came to visit the Borough of Harrow, and its diverse multicultural communities; at the Krishna Avani School, on the 29th March 2012, as part of their Diamond Jubilee Tour. The Harrow’s Tamil Community were invited to form part of the Community Zone where a group of 7 Bharathanatiyam dancers, 2 Tavil and 2 Nadeswaram musicians as well as 4 Kavadi participants were selected to perform in front of the royal couple followed by an entourage of over 250 VIP guests of the palace. Four of our young Karainagar participants; Kalpana Jeyasingam, Saathana Jeyasingam Chiinthu Sarvanathan (Dancers) and Senthuran Ganeshan (Tavil) were given this once in a lifetime opportunity to showcase our Tamil Cultures and Traditions. The Karai Welfare Society would like to extend their best wishes and to congratulate these young people on this proud and momentous occasion.
முடிக்குரிய வைரமும் எம் காரை மண்ணின் நாளைய விழுதுகளும்.
சூரியன் அஸ்தமிக்காத விரிந்தகன்ற சாம்ராஜ்யத்தைக் கொண்டது பிரித்தானியா. எம் தாயக மண்ணின் அன்றைய முடிகுரிய ஆட்சியாளர்களான பிரித்தானிய அரச குடும்பத்தாரும் காரை மண்ணின் இன்றைய விழுதுகளும் சந்திதுக் கொண்ட பெருமைக்குரிய ஒரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்து மகிழ்வதில் பிரித்தானிய காரை நலன் புரிக்சங்கம் பெருமை கொள்கிறது.
பிரித்தானிய முடிக்குரிய எலிசபத் மகாராணி ஆட்சி முடியேற்ற அறுபதாம் ஆண்டின் நிறைவை பிரித்தானியாவும் அதன் நேசமிகு குடியேற்ற நாடுகளும் கொண்டாடும் ஆண்டாக இது அமைகிறது. முடியேற்ற வைர விழா ஆண்டின் சிறப்பு விஜயங்களில் ஒன்றாகஇ கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதியன்று மேன்மைமிகு மகாராணியும் மேன்மைமிகு எடின்பேர்க் கோமகனும் கரோ நகரசபையில் உள்ள கிருஸ்ணா அவனி பாடசாலைக்கு விஜயம் செய்தனர்.
பிரித்தானியாவில் வாழும் பல்லின மக்களின் சந்திப்பாக அமைந்த இந்த விஜயத்தின் போது தமிழினத்தின் கலாசார வெளிப்பாடுகளை முன்வைக்கும் வகையில் ஒன்பது தமிழ் கலைஞர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். அழைக்கப்பட்ட ஒன்பது முதன்மைக் கலைஞர்களில் நான்கு இளைய கலஞர்கள் நம் மண்ணின் அடுத்த தலைமுறை விழுதுகள் என்பதே எம் பெருமையும் இந்தப் பகிர்வுமாகும்.
ஏழு பரத நாட்டியக் கலைஞர்களும் இரண்டு தவில் மற்றும் இரண்டு நாதஸ்வரக் கலைஞர்களும் தமிழ் கூறு நல்லுலகின் கலாசார வெளிப்பாட்டிற்காக அழைக்கப் பட்டிருந்தார்கள். அழைக்கப்பட்ட இளம் கலைஞர்களில் மூன்று பரத நாட்டியக் கலைஞர்களும் ஒரு தவில் கலைஞரும் நம் மண்ணின் அடுத்த தலைமுறையினராக இருந்த பெருமையினை எம் ஊரின் உறவுகளோடு இச் செய்தியின் ஊடாக பகிர்ந்து மகிழ்கிறோம்.
பங்கேற்ற நம் காரை மண்ணின் கலைஞர்கள்;
சிந்து சர்வானந்தன் (பரதம்)
கல்பனா ஜெயசிங்கம் (பரதம்)
சாதனா ஜெயசிங்கம் (பரதம்)
செந்தூரன் கணே (தவில்)
உலகெங்கும் பரந்து வாழும் எம் மண்ணின் உறவுகளின் வாழ்த்தும் ஆசியும் இத்தகைய அடுத்த தலைமுறைக் கலைஞர்களைச் சென்று சேர வேண்டும் என பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம் எதிர்பார்க்கிறது.