மேற்குறிப்பிட்ட இரண்டு நிதியாண்டுகளில், எமது சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் சம்பந்தமான விபரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

காரை 100

எமது ஊரான தீவிற்கு காரைநகர் என பெயர் பெயரிடப்பட்டு 100 வருடங்கள் கடந்ததை நினைவு கூறும் அதேவேளை, எமது ஊரை மேம்படுத்த துறை நீதியாக எப்படியான பகுதிகளில் முன்னேற்ற என்னென்ன செய்ய வேண்டும் என துறை ரீதியாக சிறப்பு பெற்றவர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன. அவை காரைநகர் மக்களுக்காக இலத்திரனியல் நூலகமாக youtube.com  இல் ஏற்றப்பட்டு மக்கள் பார்வைக்காக இருந்து வருகிறது.

கீழ்வரும் பகுதிகள் பற்றி, குறித்த துறைசார் வல்லுனரின் கருத்துக்களை குறித்த நேர சுட்டி மீது அழுத்துவன் மூலம் நேரடியாக சென்று பார்வையிடலாம்.

காரைநகர் விவசாயம் – 2:59:00

காரைநகர் மீன்பிடி – 3:11:00

காரைநகர் பனைவளம் – 3:21:00

காரைநகர் மருத்துவ தேவைகள் – 3:22:00

காரைநகர் இயற்கை வாழ்வு – 3:37:00

காரைநகர் சைவம் – 3:58:20

காரைநகர் நீர் முகாமைத்துவம் – 4:16:40

காரைநகர் வைத்தியசாலை – 4:44:30

காரைநகர் சினிமா – 4:57:20

காரைநகர் ஊடகம் – 5:02:30

காரைநகர் பொருளாதாரம் – 5:27:45

சமுக அமைப்புக்கள் சமூக பொறுப்புடனா? – 5:57:22


கல்வி

தியாகராஜா நிதியத்திற்கு நிதி பங்களிப்பு.

ஒவ்வொரு வருடமும் £ 6,250 பணம் மேற்படி நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

பாடசாலைகளின் கட்டமைப்பு மேம்படுத்தலுக்காக நிதியுதவிகள் செய்யப்பட்டுள்ளன.

  1. காரைநகர் இந்துக்கல்லூரி மைதான மதில் கட்டுமானத்திற்காக £ 9,018.60 நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சங்க நிதி மற்றும், காரைநகர் இந்து பழைய மாணவர்களிடமும், ஏனைய காரைநகர் மக்களிடமிருந்தும் நிதி சேகரிக்கப்பட்டது.
  2. காரைநகர் யாழ்ரன் கல்லூரி ஆரம்ப பாடசாலை (கோவிந்தன் பாடசாலை) கட்டட திருத்தத்திற்கு என £ 3,464.10 சங்க நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  3. ஏழை மாணவர்களுக்கு பாடவிதான பேனா, பென்சில், கொப்பி என்பவற்றை   வழங்க £ 498.08 (2023/2024) மற்றும் £ 628 (2022/2023) நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு லாவண்யா மற்றும் வைஷ்ணவி எனும் இளைய தலைமுறையினரின் நிதி பெறப்பட்டு இருந்தது.
  4. வியாவில் பாடசாலை மைதான திருத்த வேலைகளுக்காக எமது சங்க நிதி பங்களிப்பாக £ 530 (2023/2024) மற்றும் £ 503 (2022/2023) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

நீராதாரம்

கிணறு அமைக்க நிதி

J/45 கிராம சேவையாளர் பிரிவில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களின் நீர் தேவைக்கு கிணறு ஒன்றை அமைக்க எமது சங்கத்தால் £ 1,184.25 நிதியானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

பிரதேச சபை வாய்க்கால் அமைப்பு

பிரதேச சபை நெறிப்படுத்தலில் மழைநீர் வாய்க்கால் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதிற்கு அமைவாக, £ 1,207.50 சங்க நிதியானது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சக்கலாவோடையில் மழைநீரால் போக்குவரத்து வீதி தொடர்ச்சியாக சேதமடைவது தொடர்பாக, பிரதேச சபையால் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு எமது சங்கம் ரூபா 500,000 நிதியினை வழங்கி உதவி செய்துள்ளது. மழைநீரினை கடலில் கொண்டுபோய் கடலில் விடுதலில் எமது சங்கத்திற்கு உடன்பாடு இல்லை என்றாலும், போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க குறிப்பிட்ட பரீட்சார்த்த முயற்சியில் எமது பங்களிப்பையும் வழங்கினோம்.

 

இளையோர் மேம்படுத்தல்

இளையோர்களின் சமூக செயட்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக, காரைநகரில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
1. காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம்- £ 1,151.78 (ரூபா 500,000)
2. களபூமி விளையாட்டுக்கழகம் – £ 1,151.78 (ரூபா 500,000)
3. தோப்புக்காடு விளையாட்டுக்கழகம் – £ 345.22 (ரூபா 135,000)
4. இளஞ்சுடர் விளையாட்டுக்கழகம் – £ 1,224.51 (ரூபா 500,000)
5. கோவளம் விளையாட்டுக்கழகம் – £ 1,151.78 (ரூபா 500,000)

இவற்றுக்கு மேலதிகமாக, திரு நாகரத்தினம் அவர்களின் தனிநபர் செயல்திட்டம் ஒன்றின் ஊடாக காரை சலெஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு £ 9,500 நிதி இந்த நிதியாண்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியில் குறித்த விளையாட்டுக்கழகத்தின் மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டது.

வைத்திய சேவைகளுக்கு உறுதுணை

(1) காரைநகர் வைத்தியசாலை

காரைநகர் நோயாளர் நலன்புரிச்சங்கத்திற்கு எமது சங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட வங்கி கணக்கு திறக்கப்பட்டு அது சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ளது.

நோயாளர் நலன்புரிச்சங்க வங்கி விபரம்:

காரைநகர் நோயாளர் நலன்புரிச்சங்கம்.

கணக்கு இலக்கம் 89389640,

வங்கி : இலங்கை வங்கி, கிளை : காரைநகர்.

வலந்தலை வைத்தியசாலைக்கு நேரடியாக உதவ விரும்புவார்கள், குறித்த வங்கிக்கு பணத்தை அனுப்பி வைக்கலாம். எமது சங்கத்தின் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம்.

எமது சங்கத்தினால் பாரிய அளவிலான திருத்த வேலைகள் காரைநகர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி 2022/2023 நிதியாண்டில் மட்டும், £ 7,449.11 சங்க மற்றும் உண்டியல் நிதியானது காரைநகர் வைத்தியசாலையின் மேம்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(2) மூளாய் வைத்தியசாலை 

திரு பொன்னையா ஞானானந்தன் அவர்களின் தனிநபர் செயல்திட்டம் ஊடாக மூளாய் வைத்தியசாலைக்கு £ 1,750 (2022/2023) மற்றும் £ 1,250 (2023/2024) நிதி  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியில் குறித்த மூளாய் வைத்தியசாலையில் துப்பரவு பணி இடம்பெற்று வருகிறது.

(3) யாழ்ப்பாண வைத்தியசாலை 

எமது சங்க உண்டியல் நிதியில் இருந்து, யாழ்ப்பாண வைத்திய சாலையின் கோரிக்கைக்கு இணங்க ரூபா 600,000 பெறுமதியான மருந்துப் பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டது. மேலும் அதே நிதியில் இருந்து, யாழ் வைத்தியசாலை சுகாதார பணியாளருக்கு, போக்குவரத்தை இலகுபடுத்தும் செயல்திட்டத்திற்கு ரூபா 550,000 பெறுமதியில் 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

(மொத்தமாக £ 2,571.78.)

பிரித்தானியா வாழ் காரை மக்களின் நலன்

மேற்படி குறிக்கோளிற்கு அமைவாக, எமது சங்கத்தினால் வருடாந்தம் காரை சங்கமம் எனும் விளையாட்டு விழாவும், காரை கதம்பம் எனும் கலாச்சார விழாவும் நடத்தப்படுவது யாவரும் அறிந்ததே. அதற்கமைய இந்த காலத்திலும் காரை சங்கமம் மற்றும் காரை கதம்பம் என்பன சிறப்பாக, நிறைந்த அவையினருடன் நடாத்தி வைக்கப்பட்டுள்ளது. வழமைபோல், இவ்வருட நிகழ்களிற்கும் எமது சங்க பொதுநிதி பயன்படுத்தப்படாமல், நிகழ்விற்கென நிதி சேகரிக்கப்பட்டு மிகையுடன் நடத்தப்பட்டுள்ளது.

  1. காரை சங்கமம் 2022
  2. காரை கதம்பம் 2023
  3. காரை சங்கமம் 2023

 

காரைநகரானின் திரைப்படம் – ஒருத்தி 2

எமது சங்கத்தால் மேற்படி திரைப்படம் பிரித்தானியாவில் திரையிடப்பட்டது.


பிரித்தானிய வாழ் காரைநகர் மக்களாகிய நீங்கள் எமது செயட்பாடுகள் செவ்வனே நடப்பதை மேலேயுள்ள அறிக்கைமூலம் உறுதி செய்யலாம்.

எனவே எமது செயட்பாடுகளை சிறப்பாக செய்ய தங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
– அங்கத்துவ பணம்
– நன்கொடைகள்
– தனிப்பட்ட செய்திட்டங்கள்
– உண்டியல் நிதி சேகரிப்பு
என்பவற்றின் ஊடாக உங்கள் பங்களிப்பை வழங்கி எமது செயற்பாட்டை தொடர உதவவேண்டும்.

பெருமளவிலான செயல்திட்டங்களை செய்தல், எமது சங்கம், தொடர்ந்து செல்ல நிதியுதவி தேவையாக உள்ளது. உங்களின் ஒத்துழைப்பு, காரைநகரை மேம்படுத்த கிடைக்கும் என நம்புகிறோம்.


“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
        தாழாது உஞற்று பவர்”⁠ (திருக்குறள் – 620) 


புகைப்பட தொகுப்பு

  1. காரைநகர் வைத்தியசாலையில் திருத்தப்பணிகள்


2. யாழ்ப்பாண வைத்தியசாலையில் மருந்து நன்கொடை


3. காரை இந்து மைதான மதில் கட்டுமானம்

 


4. ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கல்

 


5. விளையாட்டு கழகங்களுக்கான நிதி பங்களிப்பு 

 


6. பிரதேச சபையின் கோரிக்கைக்கு ஏற்ப வடிகால் அமைப்பு 

 


7. காரை கதம்பம் மற்றும் காரை சங்கமம் 

 


8. ஒருத்தி 2

 

 


9. சுயதொழில் பெண்களுக்கான கிணறு