
வாழ்த்துகின்றோம்
அமுருதா (அமு) சுரேன்குமார்.
காரைநகர் வரலாற்றில் பல தசாப்தங்களாக பலதுறைகளிலும் சாதனையாளர்களையும், அறிஞர்களையும் கொண்டுள்ளது மட்டுமல்லாமல் இன்றைய இளைய சமுதாயமும் இவற்றை தக்கவைத்து வருகின்றார்கள் என்றால் மிகையாகாது. இந்தவகையில் காரைநகரை ஒரு பின்புலமாக கொண்ட இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து வருபவருமான அமுருதா (அமு) சுரேன்குமார் அவர்கள் இங்கிலாந்தின் 19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணியில் இணைந்து ஒரு முதன்மை துடுப்பாட்ட வீராங்கனையாக வலம் வருவது தமிழினத்திற்கும் எமது காரைநகர் மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு விடயமாகும். இவரது தந்தையார் சுரேன்குமார் அவர்களும் யாழ் சென்ட் யோன்ஸ் கல்லூரியின் முன்னைநாள் சிறந்த ஒரு துடுப்பாட்ட வீரருமாவார்.
அமுருதா அவர்களின் பேரனார் திரு இராசநாயகம் முருகதாசன் அவர்கள் எமது பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் ஆரம்பகால தோற்றுவிப்பாளர்களில் முன்னின்று உழைத்தவர். இவர் மட்டுமல்ல இவரது சகோதரர்களான சுந்தரதாசன் மற்றும் சிவதாசன் அவர்களும் கடந்த பல ஆண்டுகள் எமது சங்கத்தை செவ்வனே நிர்வகித்து வழிநடத்தி வந்துள்ளார்கள்.
அமுருதா அவர்கள் மேன்மேலும் வெற்றிபெற்று, வரும் காலங்களில் இங்கிலாந்து தேசிய அணியிலும் இணைந்து இவரது குறிக்கோள் வெற்றிபெற நாமும் மனதார வாழ்த்துகின்றோம்.
நன்றி.
வணக்கம்.
நிர்வாகம்,
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்.

