அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப,
எமது சங்கத்தின் விளையாட்டு நிகழ்வு,
காரை சங்கமம் 2023,
வரும் ஆகஸ்ட் 12 ம் திகதி ( 12 – 08 – 2023), அன்று நடைபெற இருக்கிறது.
இந்த நாளை,
உறவுகளுடன் சங்கமிக்க ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

 


அன்பான பிரித்தானியா வாழ் காரைநகர் மக்களே,

எமது விளையாட்டு விழா சிறக்க உங்கள் அனைவரினதும் வருகை முக்கியம் ஆகிறது.

குறிப்பாக உரிய நேரத்திற்கு மைதானத்திற்கு வந்து, உங்கள் குழந்தைகளும் விளையாட்டுகளில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மதியம் 12.00 மணிக்கு சரியாக, சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் ஆரம்பித்து விடும். எனவே நேரத்துடனே வந்து, கூழ் குடித்துவிட்டு, விளையாட தயாராகுங்கள்.


எமது நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காரைநகர் யாழ்ரன் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு பரமசிவத்தின் புதல்வரும், பிரித்தானியாவில் வைத்தியராக பணிபுரிந்து வருபவருமான சிவமயூரன் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்.


அனுசரணை :

மைதானம் – Everyday குடும்பம்

முதலாம் பரிசு – KKV குலரத்தினம் நினைவாக

IPOSG

நிகழ்ச்சி நிரல்

 • 10.00 – 12.00 : ஒன்றுகூடலும், கூழ் குடித்தலும் 
 • 12.00 – 15.00 : விளையாட்டு நிகழ்வுகள் – சிறுவர்கள் முதல் முதியோர் வரை 
  • 3 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
  • 5 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
  • 7 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
  • 9 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
  • 12 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
  • 15 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
  • 17 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
  • 21 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
  • 30 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
  • 40 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
  • 50 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
  • 60 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
  • 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான விளையாட்டுகள்
 • 15.00 – 16.00 : கலாச்சார விளையாட்டுக்கள் 
  • தாச்சி
  • கயிறு இழுத்தல்
 • 16.00 – 17.00 : விருந்தினர்கள் கௌரவிப்பு 
  • தலைமையுரை
  • பிரதம விருந்தினர் உரை
  • சிறப்பு விருந்தினர் உரை
 • 17.00 – 17.30 : பரிசில் வழங்கல்கள் 
 • நன்றியுரை

 • வந்தவுடன் போட்டியில் பங்கு பற்றுவதற்கான, விளையாட்டு வீரர் இலக்கத்தை தரவுகளை தந்து பெற்றுக்கொள்ளவும். அத்தரவுகளை வைத்தே வெற்றியாளருக்கான பதக்கங்கள் வழங்க இருப்பதால், அவற்றை கவனமாக வைத்திருக்கவும். 
 • மேலும் வழமை போல், 9 வயதிற்கு உட்பட்ட சிறார்களை ஊக்குவிக்கும் முகமாக, பங்குபற்றும் அனைத்து 9 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கும் பங்குபற்றலை ஊக்குவித்து பதக்கம் வழங்கப்படும். எனவே தங்கள் பிள்ளைகளை வெற்றி, தோல்வி பற்றி யோசியாது விளையாட்டில் ஈடுபடுத்துங்கள்.
உங்கள் அன்பளிப்பை வழங்க….