வணக்கம் பிரித்தானியா வாழ் காரைநகர் மக்களே,
பெருந்தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக, நடைபெறாமல் இருந்த காரைசங்கமம் இந்த வருடம், 30 – 07 – 2022 அன்று மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
காரைநகர் மக்களின் நீண்டகால எதிர்ப்பான எமது சங்க விளையாட்டு நிகழ்வு, கனகச்சிதமாக நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு, நடாத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வாழ் காரைநகர் மக்களும், விடுமுறைக்காலத்திலும் கூட, அண்ணளவாக 500 பேர் அளவில் எம் விளையாட்டு விழாவில் கூடி தமது அமோக ஆதரவை வழங்கினார்கள். விளையாட்டு மைதானத்திற்குள் குவிந்திருந்த 100 இற்கு மேற்பட்ட மகிழுந்துகள் சாட்சியாக இருந்தன. மேலும் கூடியிருந்த காரைநகர் மக்களும், நிகழ்ச்சிகள் செவ்வனே நடக்க தமது முழு ஒத்துழைப்பையும் எமது சங்க நிர்வாகத்திற்கு வழங்கி இருந்தார்கள்.
மேலும் நீண்ட தூரத்தில் இருந்தும், இதுவரை எமது விழாக்களில் பங்குபெறாத பலரும் பங்குபற்றி இருந்தார்கள். அத்தோடு எமது சங்க செயற்பாடுகளில் நிறைவுகளைக்கண்டு, 25 இற்கு மேற்பட்டவர்கள் புதிய அங்கத்தவர்களாக சேர்ந்துள்ளார்கள்.
எமது விளையாட்டுவிழா 2022 இல், காரைநகரில் நீண்டகாலமாக பணியாற்றிய மருத்துவர் மயூரநாதன் அவர்கள், பிரதம விருந்தினராக பங்குபற்றி சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். மேலும் பிற நாடுகளில் இருந்து வந்த காரைநகர் மக்களும் எம் விழாவினை சிறப்பித்தனர்.
“நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்”
“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல”
எமது நிகழ்வின் நினைவுகள் நிழற்படங்களாகவும், காணொளிகளாகவும் இங்கே இணைக்கப்படும்.