IMG-20220704-WA0009-1

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மருத்துவ சேவைகளையும் பாதித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. அதனால் எமது சங்க உண்டியல் நிதியை வடமாகாண மருத்துவ சேவைகளுக்கு வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. 

 

அதற்கமைய யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருக்கும் இடர்பாடுகளை அறிந்து எம்மால் ஆன உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்தோம்.  யாழ்ப்பாண வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் த சத்தியமூர்த்தியின் கோரிக்கைக்கு அமைவாக, இரண்டு செயல்திட்டங்கள் எம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

 

  1. சத்திர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்து வாங்குவதற்கு, யாழ்ப்பாண வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்திற்கு ரூபா 600,000 நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.    

 

எமது சங்க செயலாளர் ப தவராசா, உபதலைவர் வி நாகேந்திரம் மற்றும் நிர்வாக உறுப்பினர் க பாலகிருஷ்ணன் ஆகியோர் யாழ் வைத்தியசாலை நலன்புரிச்சங்க நிர்வாகிகளிடம் குறித்த மருந்தை கையளித்தபோது.

2. நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு, சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்து உள்ளது. துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் மலைபோல் அதிகரித்து உள்ளது. 

இந்த நெருக்கடியை தீர்க்கும் முகமாக, ரூபா 550,000 பெறுமதியில் 10 துவிச்சக்கர வண்டிகள், யாழ்ப்பாண வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ் வைத்தியசாலை பணியாளர்களுக்கு, கடன் – வாடகை அடிப்படையில், எம்மால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் கொடுத்து உதவப்படும். 

 

எமது சங்க செயலாளர் ப தவராசா, உபதலைவர் வி நாகேந்திரம் மற்றும் நிர்வாக உறுப்பினர் க பாலகிருஷ்ணன் ஆகியோர் யாழ் வைத்தியசாலை நலன்புரிச்சங்க நிர்வாகிகளிடம் துவிச்சக்கர வண்டிகளை கையளித்தபோது.