வடமாகாண மருத்துவ சேவையை நோக்காகக் கொண்டு, எமது சங்கத்தின் உண்டியல்கள் மூலம் நிதி சேகரிப்பு இடம்பெறுவது யாவரும் அறிந்ததே.
தற்போதைய இலங்கை நாட்டின் நிலவரத்தை கவனத்தில் கொண்டு, எமது உண்டியல் நிதியை வடக்கு மாகாணத்தின் மருத்துவ தேவைகளுக்குகாக விரைந்து கொடுக்க, எமது சங்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இருந்த போதிலும் கோவிட் தொற்றை தொடர்ந்து வந்த காலத்தில் எமது உண்டியல் பண சேகரிப்பு தேக்க நிலையை அடைந்திருந்தது. உண்டியலில் இருந்து நிதி சேகரிப்பை, நாம் இப்போது தீவிரமாக முன்னெடுத்துள்ளோம். எமக்கு தங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
எல்லோராலும் வடமாகாணத்தின் வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகளை வழங்குவதில், பல இடர்பாடுகளை அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக மருந்துகள் தட்டுப்பாடாக உள்ள நிலையே அங்குள்ளது.
எமது சங்கத்திடமும் பல கோரிக்கைகள் வந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்து வந்த ஒரு கோரிக்கையை நிறைவேற்ற உண்டியல் நிதியை அவசரமாக சேகரிக்கிறோம். உரிய விபரங்கள் மிகவிரைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
உங்கள் கடைகளிலோ, அல்லது உங்கள் பராமரிப்பிலோ உள்ள உண்டியல்களில் சேர்ந்த பணத்தை எமது வங்கியில் வைப்பு செய்துவிட்டு, வைப்பு செய்த தொகை மற்றும் உண்டியல் இலக்கத்தை எமது சங்க மின் அஞ்சல் முகவரிக்கு (info@karainagar.org ) அல்லது எமது சங்க பொருளாளர் தர்சன் (07414618368), உபபொருளாளர் ஞானாந்தன் (07905503527) அல்லது உங்களால் தொடர்பு கொள்ளத்தக்க நிர்வாக உறுப்பினருக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உரிய பற்றுசீட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
எமது சங்க வங்கி கணக்கு விபரம் வருமாறு
Bank : Metro Bank
Account Number : 4325 1635
Sort Code : 23 05 80
Name : Karai Welfare Society (UK)
உங்கள் ஒத்துழைப்பு, நாட்டின் மருத்துவ தேவைக்கு தேவை.