british-one-pound-coins-on-british-bank-notes-JBBWW4

அன்பான பிரித்தானிய வாழ் காரை மக்களே,


தாங்கள் செலுத்தும் நன்கொடை, அங்கத்துவ பணம் என்பவற்றை காசாக செலுத்தி இருந்தால்,

அதற்குரிய எமது சங்க பற்றுச்சீட்டை உடனடியாக எமது சங்க நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும்.


குறிப்பாக அங்கத்துவ பணத்தை (£60) காசாக அல்லது வங்கி மூலம் (BACS) செலுத்தி இருந்தால், அதற்கான பற்றுசீட்டை வரும் வருடாந்த பொது கூட்டத்திற்கு (AGM) முன்பாக பெற்று, தங்கள் அங்கத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.


எமது சங்கத்தால் அங்கத்தவர்களுக்கு, அங்கத்துவ இலக்கம் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் அங்கத்துவத்தை உறுதிப்படுத்த, அங்கத்துவ இலக்கத்தை (KWS_ _ _ ) பெற்று இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இது தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து, எமது சங்க நிர்வாகத்தை சிறந்த முறையில் நடாத்த உதவும்.


உரிய பற்றுசீட்டை உரிய காலத்தில் பெற்றுக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி