வணக்கம் காரை மக்களே,
மலரும் காரைநகர் மண்ணின் நினைவுகளுடன்……
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் கோடை கால விளையாட்டு விழாவான “காரைச் சங்கமம் 2019” இம்முறை 400 இற்கும் மேற்பட்ட காரை மக்கள் கலந்துகொண்டு வெகு விமர்சையாக 07 – 07 – 2019 அன்று நடைபெற்றது.

இவ் விளையாட்டு விழாவில் பல புதியவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள். இம்முறை விளையாட்டு விழா ஒழுங்குகள் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.




இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஊடகவியலாளர் திரு இளையதம்பி தயானந்தா பங்குபற்றி இருந்தார். மேலும் பிறநாடுகளில் வாழும் காரை மக்களும் கலந்து கொண்டனர்.


வழமை போல் எமது தாயக உணவுகள் பரிமாறப்பட்டன. குறிப்பாக இம்முறை சைவ, அசைவ கூழ்கள் மற்றும் பழஞ்சோற்றுக் கஞ்சி ஆகிய உணவுகள் மிகவும் நல்ல முறையில் மக்களின் வரவேற்பைப் பெற்றன.



கலந்து கொண்டவர்கள் இம்முறை விளையாட்டு விழா சிறப்பாக அமைந்தது என்றும் அடுத்த முறை தாம் கட்டாயமாக கலந்து கொள்வதோடு மேலும் புதியவர்களையும் வரவழைத்து சிறப்பிக்க உள்ளதாக தெரிவித்து சென்றார்கள்.


கீழே உள்ள இணைப்பை அழுத்தி இவ் விளையாட்டு விழாவிற்கான காணொளி மற்றும் புகைப்படக் காட்சிகளை பார்வையிடலாம்.
காணொளிகள்
புகைப்படங்கள் காணொளியில்……
நன்றி
நிர்வாகம்
பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம்
