வணக்கம் காரை உறவுகளே,
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் (காரைநகரைப்) போல வருமா!!!
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் கோடை கால விளையாட்டு விழாவான “காரைச் சங்கமம் 2018” இம்முறை 300 இற்கும் மேற்பட்ட காரை மக்கள் கலந்துகொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ் விளையாட்டு விழாவில் பல புதியவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள். இம்முறை விளையாட்டு விழா ஒழுங்குகள் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எலுமிச்சை பழமும் கரண்டியும் ஓட்டம், சேலை கட்டி ஓடுதல், மிக முக்கியமாக தாச்சி (கிளித்தட்டு), கயிறு இழுத்தல் மற்றும் சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிகழ்வுக்கு மகுடம் சேர்ப்பது போல் இலங்கையில் இருந்து வருகை தந்த காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் உமாசுதன் குருக்கள் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திருந்தார்.
வழமை போல் எமது தாயக உணவுகள் பரிமாறப்பட்டன. குறிப்பாக இம்முறை சைவ, அசைவ கூழ்கள் மற்றும் பழஞ்சோற்றுக் கஞ்சி ஆகிய உணவுகள் மிகவும் நல்ல முறையில் மக்களின் வரவேற்பைப் பெற்றன.
கலந்து கொண்டவர்கள் இம்முறை விளையாட்டு விழா சிறப்பாக அமைந்தது என்றும் அடுத்த முறை தாம் கட்டாயமாக கலந்து கொள்வதோடு மேலும் புதியவர்களையும் வரவழைத்து சிறப்பிக்க உள்ளதாக தெரிவித்து சென்றார்கள்.
கீழே உள்ள இணையதள முகவரியை அழுத்தி இவ் விளையாட்டு விழாவிற்கான காணொளி மற்றும் புகைப்படக் காட்சிகளை பார்வையிடலாம்.
நன்றி,
காரை நலன்புரிச்சங்கம்(பிரித்தானியா