பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் யாழ்ற்ரன் கல்லூரிக்கான அண்மித்த பாடசாலை பௌதீகவள அபிவிருத்தி திட்டத்திற்கான காணி கொள்வனவு நிதிகோரல் நிறைவுபெற்றது.
இன்று (09/08/2016) கிடைத்த யாழ்ற்ரன் அதிபரின் மறு வேண்டுகோளின்படி, யாழ்ற்ரன் கல்லூரிக்கான காணிக்கொள்வனவை தனியொரு நலன்விரும்பி நிதியுதவி வழங்கி குறிப்பிட்ட காணியை பெற்றுத்தருவதிற்கு முன்வந்துள்ளமையால், நாம் இந்த கல்லூரிக்கான இந்த நிதி சேகரிப்பை இன்றுடன் நிறைவுசெய்துகொள்கின்றோம்.
இவ் நிதியுதவியை வழங்கி இக்கல்லூரிக்கான இப்பாரிய நலன்மிக்க திட்டத்தை நிறைவேற்ற முன்வந்த தயாளகுணமுடைய அந்த அன்பர்க்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
இதுவரை மூவரிடமிருந்து மொத்தமாக £700.00 நிதியுதவியாக இத்திட்டத்திற்கு இவ்விணைய இணைப்பின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. இப்பணம் இம் மூவருடனும் தொடர்புகொண்டு அவர்களின் விருப்பதிற்கு இணங்க முறையே கையாளப்படும்.
நன்றி
நிர்வாகம்,
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்