காரைச் சங்கமம் 2016 (தியாகச் சங்கமம்) புதுப் பொலிவுடனும் புதியவர்களின் வருகையுடனும் சங்கமித்தது
மனத்துடன் வந்து இனத்துடன் இணையுங்கள் என்றோம்…………… எம் மக்கள் இனத்துடன் வந்து மனத்துடன் மகிழ்ந்தார்கள்,!!!!!
பொதுப்பணிகளில் இருந்துகொண்டு ஊருக்கு துரோகம் விளைவிப்பவர்கள் ஆலயங்கள் சென்று பாவமன்னிப்பு வேண்டி மண்டாட வேண்டிய காலம் வெகுவிரைவில் !!!! அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரை!!
பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் வருடாந்த விளையாட்டுப்போட்டியுடன் கூடிய ஒன்றுகூடலான காரைச் சங்கமம் நேற்றைய தினம் அமைதியான முறையில் அட்டாகாசமாக நிறைவுற்றது.
சங்கமம் இவ்வருடம் எமது மண்ணின் தியாகச் செம்மல் அமரர் ஆ.தியாகராஜா அவர்களின் நூறாவது பிறந்ததின ஞாபகார்த்தமாக ”தியாகச் சங்கமம்” என மிளிர்ந்தது.
இவ் அரியநிகழ்வுக்கு தாயகத்தில் இருந்து பிரதம அதிதியாக சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் நிகழ்விற்கு சமூகம் தர முடியவில்லை.
கெளரவ விருந்தினர்களாக , எமது பிரித்தானியா காரைநலன் புரிச் சங்கத்தின் நலன்விரும்பிகளான திரு. S . கமலநாதன், திரு. P . உதயகுமார், திரு. T . தனபாலன், திரு. க. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். எமது ஊடகவியலாளர் திரு இ . தயானந்தாஅவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
ஜெர்மனியில் இருந்து திரு சாயி குடும்பத்தினர் வழமைபோல் குடும்ப சகிதம் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புங்குடுதீவு உதைபந்தாட்ட குழுவுடன் திரு கருணலிங்கம் அண்ணா, பிரேம் அண்ணா(Lyca Mobile ) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வு காலை 11 மணியளவில் ஆரம்பமானது. தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் களைகட்டத் தொடங்கின. குறிப்பாக இம்முறை ஆரம்பிக்கப்பட்ட கிளித்தட்டு (தாச்சி) ஆண்பெண் இருபாலரையும் கவர்ந்தது. தொடர்ந்து இளையோரும் இதில் குதித்தனர்.
உதைபந்தாடடம், ஒட்டம், தடை ஒட்டம், கயிறிழுத்தல் என விளையாட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன.
மாலை 4 மணியளவில் புங்குடுதீவு நலன் புரிச் சங்க உதைபந்தாட்ட குழுவுக்கும், எமது பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் இளையோர் அமைப்பின் உதைபந்தாட்ட குழுவுக்கும் இடையிலான ஓர் நட்பு ரீதியிலான உதைபந்தாட்ட போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது, இறுதியில் புங்குடுதீவு அணி 2:1 என்றரீதியில் வெற்றி பெற்றது.
சிறுண்டிச்சாலையில் சுடச்ச்சுட உணவுகள் சுவையாக விநியோகிக்கப்பட்டன. குறிப்பாக கூழ் இம்முறை துரித கதியில் காலியானது. ஊரில் இருந்து கொண்டுவரப்பட்ட பனையோலையில் கொய்யப்படட பிளா கூழுக்கு மேலும் தனி ருசி ஊட்டியது.
மாலை 6 மணியளவில் பரிசளிப்பு நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் பிரதம விருந்தினர் உரை அனைவைரையும் சிந்திக்கவைத்தது.( காணொளி இணைக்கப்பட்டுள்ளது). தொடர்ந்து திரு தயானந்தா அவர்கள் அமரர் ஆ தியாகராஜா அவர்கள் பற்றியும், அவர் ஊருக்கு ஆற்றிய சேவைகள் பற்றியும் உரையாற்றினார், தலைவர் திரு கோணேசலிங்கம் அவர்களின் உரையைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வுடன் சங்கமம் இனிதே நிறைவுற்றது.
இணைக்கப்பட்டிருக்கும் காணொளிகள், புகைக்கப்படங்கள், ஒளிவுமறைவின்றி உங்களுக்கு மேலும் விளக்கமளிக்கும்.
நன்றி
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்.