பிரித்தானிய காரைநலன் புரிச்சங்கத்திற்கு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க நிதியுதவியுடன் காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கான இரும்புச்சத்தது பாணி மருந்தினை முன்பள்ளிஆசிரியர்களிடம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரித்தானிய நலன்புரிச்சங்க நிதியுதவியுடன் காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கான இரும்புச்சத்து பாணி மருந்துகள் ஆசிரியர்களிடம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் 20.05.2016 வெள்ளிக்கிழமை காரைநகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிஎஸ்.குகதாஸன், காரைநகர் பொது சுகாதார வைத்திய அதிகாரி, முன்பள்ளிஇணைப்பாளர், பிரித்தானிய காரைநலன்புரிச்சங்க காரைநகர் பிரதிநிதி உட்பட முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சுகாதார வைத்திய அதிகாரி மேலும் உரையாற்றுகையில் எமது அரசின் நிதி ஒதுக்கீட்டில் கர்ப்பிணித்தாய்மாருக்கான சத்துணவு, பாடசாலை மாணவர்களிற்கான சத்துணவுத்திட்டம் என்பனவற்றினை நடைமுறைப்படுத்திய போதிலும் முன்பள்ளிமாணவர்களின் போசாக்கு திட்டத்தில் எவருமே அக்கறை செலுத்துவதில்லை.
பொதுவாக இலங்கையில் சிறுவர்களிற்கான இரும்புச்சத்து குறைபாடு பெரும் குறையாக காணப்படுகின்றது. இந் நிலையில் யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. காரைநகர் அபிவிருத்தியில் அக்கறை உடைய பிரித்தானிய காரைநலன்புரிச்சங்கம் எனது கோரிக்கையை ஏற்று இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளது.
பிரித்தானிய நலன்புரிச்சங்கத்தினரின் 2040ம் ஆண்டு காரைநகர் எப்படி இருக்கவேண்டும் என்ற ஆதங்க ஒளித் தொகுப்பினை இணையத்தளத்தில் பார்த்தேன். அப்போதுதான் அவர்களின் உணர்வுகளை மதிப்பட முடிந்தது. ஆனால் அதற்கான அடித்தளம் இந்த சத்துபாணி வழங்கும் நிகழ்வாகவும் இருக்கலாம். ஏனெனில் இச்சத்து பாணி வழங்குவதனுடாக சிறுவர்களின் உடல் ஆரோக்கியம் என்பதனை விட அவர்கள் கற்றல் செயற்பாட்டிலும் இலகுவாகவும் திறமையாகவும் ஈடுபடமுடியும். இதனூடாக இச்சிறுவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியலாளர்களாகவும் தேக ஆரோக்கியம் ஆனவர்களாகவும் உருவாக்கப்படுவதனூடாக காரைநகர் சிறந்த அபிவிருத்தியடைய வாய்ப்பு ஏற்பட சர்ந்தர்ப்பம் உருவாகின்றது. ஆதலால் இந்த சத்து பாணி மருந்தினை தொடர்ந்து மூன்றுமாத காலத்திற்கு முன்பள்ளி மாணவர்களிற்கு ஒவ்வொரு நாளும் வழங்க வேண்டும். இதற்கான முன்னேற்றம் சுகாதார பரிசோதகரால் அவதானிக்கப்பட்டு அறிக்கையிடப்படும் என்று தெரிவித்ததுடன் இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிற்கு பாராட்டு தெரிவித்ததுடன் இதற்கு நிதியுதவி வழங்கிய பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தினரையும் பாராட்டுகின்றேன் என்றும் மேலும்தெரிவித்தார்.
இத்தருணத்தில் காரைநகர் நலன்புரிச்சங்க நிர்வாகத்திற்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி,
நிர்வாகம்
காரை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா)