பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் “காரை கதம்பம் 2016” நிகழ்வு Preston Manor School, Wembley, London, HA9 8NA  எனுமிடத்தில் 23/01/2016 (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல், காரை கீதம், மௌன அஞ்சலி மற்றும் வழமையான கலை நிகழ்ச்சிகளுடனும் எம்முறவுகளின் பேராதரவுடனும் நிகழ்ச்சிகள் களைகட்டின. நடனங்கள், வயலின், பாட்டுக் கச்சேரிகள் என பல்வேறு நிகழ்சிகளை எமது சிறார்கள் திறம்பட வழங்கியிருந்தார்கள்.
இந்நிகழ்வு  www.karai.tv  எனும் இணைய  தொலைக்காட்சியில் இல் நேரடியாக  ஒளிபரப்பப்பட்டு வேறு நாடுகளில் உள்ளவர்களும் நேரடியாக கண்டுகளித்தார்கள்.

கடந்த ஆண்டு காரைக் கதம்ப விழாவில் பிரசவமான எமது செல்லக்குழந்தையான பிருத்தானியா காரை இளையோர் அமைப்பு  மிகவும் சிறப்பான முறையில் தங்கள் ஓராண்டு செயல்த்திட்டங்களை  தொகுத்து காணொளி முன்னிலைப் படுத்தல்(Video Presentation) ஒன்றை சபையோருக்கு ஒரு நிகழ்வாக வழங்கி  அனைவரினதும் பாராட்டை பெற்றனர்.  இக்காணொளியினை கீழுள்ள இணைப்பில் நீங்கள் கண்டுகளிக்கலாம்:
www.youtube.com/watch?v=HRx_UX6nUIc

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற எமது பிரதம விருந்தினரான வைத்திய கலாநிதி திரு தம்பையா வாமதேவன் அவர்களின் சிறப்பு உரையில் எமது இளையோரின் பங்களிப்பு எவ்வளவு திறம்பட உள்ளதென்பதனையும் எமது சங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு திறம்பெற நடைபெறுகின்றதென்பதனையும் எடுத்துரைத்திருந்தார்.
மேலும்இ எமது எதிர்கால திட்டங்களிட்கு தன்னாலான உதவிகளை செய்வதற்கும் எண்ணியிருப்பதாகவும் தெரிவித்தார்.
எமது கௌரவ விருந்தினர் திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் தமது உரையினை பதிவு செய்திருந்தார். இதன்போது சாதி மத வேறுபாடற்று காரை மக்கள் அனைவரிதும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும், மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு செயற்திட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைபெற வேண்டுமெனவும் சங்கத்தினையும் காரை மக்களையும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து எமது சங்கத்தின் தலைவர் திரு சு கோனேசலிங்கம் (நாதன்) அவர்களின் உரை இடம்பெற்றது. இதன்போது எமது நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விளங்கங்களை சபையோருக்கு எடுத்துரைத்தார்.
மேலும் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்திற்கும், காரை அபிவிருத்தி சபைக்கும் இடையிலான சில நிர்வாக சிக்கல்களை பற்றியும் குறிப்பிட்டார்.  இந்த நிர்வாக, மற்றும் இரு சபைக்குமான கருத்து முரண்பாடுகளையும் ஒரு சுமுகமான முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கும் முகமாக  வரும் மார்ச் மாதம் முற்பகுதியில்  ஒரு விசேட கூட்டத்தினை ஒழுங்கு செய்வதாகவும் கூறினார்.  இக்கூட்டத்திற்கு அனைத்து பிருத்தானியா வாழ் காரை மக்களையும் கலந்துகொண்டு தங்கள் சொந்தக் கருத்துக்களை பதிவு செய்யுமாறும்  கேட்டுக்கொண்டார்.
இதன்போதுஇ தலைவர் அவர்கள்  எமது சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நால்வர்களையும்  (ராஜேந்திரா, சுந்தரதாசன், நாகேந்திரம் மற்றும் தவராஜா) மேடைக்கு வந்து தங்கள் கருத்துக்களை சபையோர்முன் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அவர்களும்   தங்கள் சார்பான கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
எம் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஒன்றாக நிற்பது என்பது பிரித்தானியா காரை நலன்புரிச்ச் சங்கத்தின் ஒற்றுமையின் வெளிப்பாட்டை அனைவரிற்கும் பறைசாற்றுவதாகவும் கூறிய பொழுது அரங்கமே அதிர்ந்தது.
இதனைதொடர்ந்து,மேலதிக நிகழ்வுகள் நடைபெற்று பங்குபற்றியவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவேறியது. கலந்து கொண்ட மக்கள்  இராப்போசனத்திலும்  கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீடுதிரும்பினர்
நன்றி
நிர்வாகம்.
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்.
——————————–

 

 

 

Leave a Reply