NEW BUILDING OF KARANIGAR STUDENT LIBRARY DECLARE OPENED
Karainagar Development Society (KDS) in conjunction with diaspora Karai Societies sponsored Karai Student Library phase 1 building opened on the 14th Oct 2013 by the President of Karainagar Development Society Mr Siva T Mageson and University of Jaffna professor Mr S Parameswaran.
The ceremony started with boiled milk at auspicious time and engages in religious observances. The ceremony was attended by the KDS officials, Assistance Government Agent, School principals, pre-school students and well wishes.
Audience were entertained by the pre-school children who performed dance, drama and music.
The library is a two storey building. Karainagar Development Society planned to complete building project in three phases. Phase 1 (the ground floor on the right hand side) is now completed and will be used as Early Year Student Centre. This building will also house the Karainagar Development Society office.
காரை அபிவிருத்தி சபை மாணவர் நூலக கால்கோள்விழாவும் வாணி விழாவும்
காரை அபிவிருத்தி சபையினால் புலம்பெயர் காரை அமைப்புக்களின் பேராதரவுடன் காரைநகர் புதுவீதிச் சந்தியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘காரை அபிவிருத்தி சபை மாணவர் நூலகம்’; விஜயதசமி நாளான இன்று திங்கட்கிழமை(14-10-2013) சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது.
காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு.சிவா.தி.மகேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் செயலாளரும் நூலக நிர்மாணத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமாகிய Dr.P நடராஜா வழிநடத்தினார்.
காரைநகரைச் சேர்ந்தவரும், யாழ். பல்கலைக்கழக ஆங்கிலத்துறைப் பேராசிரியருமாகிய திரு. S. பரமேஸ்வரன், காரைநகர் பிரதேச செயலர் திருமதி. தேவநந்தினி பாபு, கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, யாழ்ற்றன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர் திரு.ந.பரமசிவம், காரை அபிவிருத்திசபை முன்னாள் தலைவர் திரு.சோமசேகரம், கல்விக் காருண்யன் திரு E.S.P நாகரத்தினம், காரை அபிவிருத்தி சபைச் செயலாளரும் கிராம சேவையாளருமான திரு.இ.திருப்புகழுர்சிங்கம், காரை அபிவிருத்தி சபை பொருளாரும் சமுர்த்தி அலுவலருமான திரு.நடராஜா பரரதி மற்றும் காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடத்தில் பால் காய்ச்சிய பின்னர் மங்கல வாத்தியம் முழங்க பூசை மற்றும் சமய வழிபாடுகளை சிவத்திரு .கு.சண்முகராஜா குருக்கள் நிகழ்த்தி ஆசியுரை வழங்கினார்.
காரைநகர் பிரதேச செயலர் திருமதி.தேவநந்தினி பாபு நூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியையும் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
காரைநகரின் 14 முன்பள்ளிகளின் சிறார்கள் வழங்கிய காவடி, கோலாட்டம், நடனம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. களபூமி கலையகத்தின் ஏற்பாட்டில் சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய இசை ஆசிரியை திருமதி.S.கேதீஸ்வரியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. மிருதங்க வித்துவான் திரு.சிதம்பரநாதன் பக்கவாத்திய இசை வழங்கியிருந்தார்.
இறுதியில் முன்பள்ளிச் சிறார்கள் அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் ஒரு நிகழ்வினை வழங்கியதுடன் மிகவும் அமைதியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘காரை அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தின் கால்கோள் விழா’ இனிதே நிறைவெய்தியது.