ii

அன்பான பிரித்தானியா வாழ் காரைநகர் மக்களே,

எமது விளையாட்டு விழா சிறக்க உங்கள் அனைவரினதும் வருகை முக்கியம் ஆகிறது.

குறிப்பாக உரிய நேரத்திற்கு மைதானத்திற்கு வந்து, உங்கள் குழந்தைகளும் விளையாட்டுகளில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மதியம் 12.00 மணிக்கு சரியாக, சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் ஆரம்பித்து விடும். எனவே நேரத்துடனே வந்து, கூழ் குடித்துவிட்டு, விளையாட தயாராகுங்கள்.

இணை அனுசரணை :

IPOSG

 
நிகழ்ச்சி நிரல் 
  • 10.00 – 12.00 : ஒன்றுகூடலும், கூழ் குடித்தலும் 
  • 12.00 – 15.00 : விளையாட்டு நிகழ்வுகள் – சிறுவர்கள் முதல் முதியோர் வரை 
    • 3 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
    • 5 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
    • 7 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
    • 9 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
    • 12 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள் 
    • 15 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
    • 17 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
    • 21 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
    • 30 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
    • 40 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
    • 50 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
    • 60 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டுகள்
    • 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான விளையாட்டுகள்
  • 15.00 – 16.00 : கலாச்சார விளையாட்டுக்கள் 
    • தலையணை சண்டை
    • முட்டி உடைத்தல்
    • தாச்சி
    • கயிறு இழுத்தல்
  • 16.00 – 17.00 : விருந்தினர்கள் கௌரவிப்பு 
    • தலைமையுரை
    • பிரதம விருந்தினர் உரை
    • சிறப்பு விருந்தினர் உரை
  • 17.00 – 17.30 : பரிசில் வழங்கல்கள் 
  • நன்றியுரை
பிரதம விருந்தினராக காரைநகரில் நீண்டகாலம் சேவையாற்றிய வைத்தியர் மயூரநாதன் அவர்கள் பங்குபற்றுவார்.
சிறப்பு விருந்தினராக பங்குபற்றுமாறு, பிற நாடுகளில் உள்ள எமது ஊர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பு : வாகன தரிப்பிடங்கள் மைதானத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், வாகன தரிப்பிடம் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
  • அருகில் இருப்பவர்கள் நடந்தோ, பொது போக்குவரத்திலோ வரலாம். 
  • தூர இருந்து வருபவர்கள், இடங்களை தேடி வாகனங்களை நிறுத்தலாம். Wembley Central Car Park இல் விட்டுவிட்டு நடந்தும் வரலாம். 
  • வந்தவுடன் போட்டியில் பங்கு பற்றுவதற்கான, விளையாட்டு வீரர் இலக்கத்தை கட்டணம் செலுத்தி, தரவுகளை தந்து பெற்றுக்கொள்ளவும். அத்தரவுகளை வைத்தே வெற்றியாளருக்கான பதக்கங்கள் வழங்க இருப்பதால், அவற்றை கவனமாக வைத்திருக்கவும். 

 

  • மேலும் வழமை போல், 9 வயதிற்கு உட்பட்ட சிறார்களை ஊக்குவிக்கும் முகமாக, பங்குபற்றும் அனைத்து 9 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கும் பங்குபற்றலை ஊக்குவித்து பதக்கம் வழங்கப்படும். எனவே தங்கள் பிள்ளைகளை வெற்றி, தோல்வி பற்றி யோசியாது விளையாட்டில் ஈடுபடுத்துங்கள்.