The annual Pongal Veela “Karai Kathambam” was held Saturday 21st Jan 2012 at Preston Manor High School hall, Wembley. The event was attended by well over 400 people. The audiences were entertained by the Karai children’s cultural programmes such as Bharathanatiyam dance, cinema dance, drama, Carnatic music and speeches.
The retired doctor Dr & Mrs Nadarajah was the Chief Guest at the event. Mrs Malathy Sivakumaran (well Known as Malathy Thrma) also attended the event as a Guest of Honour.
The historic book of “Karai Manmiyam” 2nd edition (The Glory of Karainagar) was launched during the event. The function was hosted by TV presenter E Thayanantha. This book publication was sponsored by the Karai welfare Society and Canada Karai Cultural Association.
The event was very success. The organizing committee was very happy with success and thanked all those who helped behind this success and the guests and well wishes for their continued support to the Society.
Click latest photos for some photos of the program.
பிருத்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான ‘காரைக் கதம்பம் 2012’ கடந்த சனிக்கிழமை மாலை (21.01.2012) மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது. இவ்விழாவில் முக்கிய அம்சமாக முதுசங்களைத்தேடி …….. எனும் தலையங்கத்தில் பிருத்தானிய காரை நலன் புரிச்சங்கமும், கனடா காரை கலாச்சார மன்றமும் இணைத்து வெளியிடும் ‘காரை மான்மியம்’ நூலின் மீழ் பதிப்பு வெளியீட்டு விழா நிகழ்வு பிரபல ஊடகவியலாளர் திரு இளையதம்பி தயானந்தா தலைமையில்; இடம் பெற்றது குறிப்பிடதக்கது.
மேற்படி விழா குறிப்பிடப்பட்டது போல் மாலை 05:௦௦ மணிக்கு சரியாக ஆரம்பமானது. விழாவிற்க்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த ஓய்வு பெற்ற வைத்தியர் திரு.சு.நடராஜா, திருமதி நடராஜா தம்பதிகள், கௌரவ விருந்தினராக வருகை தந்திருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்,அதிபர் திருமதி .மாலதி சிவகுமார் B.A. அவர்களும் மங்கள விளக்கேற்றி வைத்து விழாவை ஆரம்பித்து வைத்தனர்.தொடர்ந்து மாதுரி பாஸ்கரன், பைரவி பாஸ்கரன் சிறுமிகளின் இனிய தேவாரத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
பரத நாட்டியம், இசைக் கச்சேரி, நாடகம், சினிமா நடனம், பேச்சு என்று பல இனிய நிகழ்வுகளை சிறுவர், சிறுமியர் மேடையேற்றினர்.
காரைக் கதம்பத்தின் முக்கிய நிகழ்வான ‘காரை மான்மியம்’ இரண்டாம் பதிப்பு நூல் வெளியீடு திரு. இளையதம்பி தயானந்தா தலைமை ஏற்க தீபம் தொலைக்காட்சி புகழ் திரு M.N.M அனஸ், மற்றும் காரை சுந்தரம்பிள்ளையின் மகள் திருமதி மாதவி சிவலீலன் அவர்களும் பங்கேற்று முறையே தலைமை உரை வெளியீட்டுரை ஆய்வுரையை அழகாக நிகழ்த்தி நூலின் முதல் பிரதியை திரு .சென் கந்தையா அவர்கள் பெற்றுக்கொண்டார். காரைநகரின் பல வரலாற்று சிறப்புகளை எடுத்துக்காடும் இந்த நூலின் முதல் வெளியீடு ஈழத்து சிதம்பரத்தில் தேர் திருவிழா அன்று வெளியிடப்பட்டது அனைவரும் அறிந்தததே.
அங்கே இந்நூல் வெளியீட்டின் மூலம் ரூபா 80000.௦௦ ஆயிரமும், நேற்றைய தினம் லண்டனில் வெளியீட்ட போது £735.௦௦ம், சேகரிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து கனடா, சுவிஸ், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்நூல் வெளியீடு செய்யப்படவுள்ளது. இந் நாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தையும் கொண்டு முதுசங்களை தேடி எனும் திட்டத்தின் ஊடாக மீண்டும் ஒரு படைப்பை காரை நலன் புரிச் சங்கமும் கனடா காரை கலாச்சார மன்றமும் இணைத்து செய்யவுள்ளது. இந்நூலின் இரண்டாம் பதிப்புரிமையையும் அதற்க்கான செலவையும் இவ்விரு சங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.
நிகழ்வில் பிரதம அதிதி ஓய்வுபெற்ற வைத்தியர்.திரு.சு.நடராஜா உரையாற்றும்போது ஊரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல நல்ல திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார் முக்கியமாக நூலக திட்டத்தை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் மக்களுக்கு விளக்கிக் கூறினார். கௌரவ விருந்தினர் திருமதி. மாலதி சிவகுமார் B.Aஅவர்கள் உரையாற்றும் போது இந்த கதம்ப நிகழ்வு தன் மனதை உருக்கியதாகவும், பிள்ளைகள் மிக அழகாக தமிழ் உச்சரிக்கிறார்கள் என்றும், நிகழ்வில் தான் கலந்தது கொண்டதையிட்டு பெருமையடைவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பிருத்தானிய நலன் புரிச்சங்கத் தலைவர் திரு.ப.தவராஜா தலைமையுரை ஆற்றும்போது, சங்கத்தின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால திட்டங்கள் பற்றியும் எடுத்துக்கூறினார். இதில் முக்கியமாக வரும் ஜூலை மாதம் திறந்த வெளியரங்கில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டி பற்றியும் எடுத்துக்கூறினார். விழா திரு S. சரவணபவானின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அதன் பின்னர் மக்கள் அனைவரும் இராப்போசன விருந்தில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள் .
பிருத்தானிய காரை நலன்புரிச் சங்கம்