Please click here for more Karai Kutties photos
இரண்டுவயதுப் பாலகர்களையும் ஈர்த்துவிட்ட “Karai Kutties”
புன்னகையால் தீட்டிய புதிய அத்தியாயம்
பிரித்தானிய காரை இளையோர் அமைப்பின் “Karai Kutties-சிறப்புச் சிறுவர் குதூகலக் கொண்டாட்டம் “ஏப்ரல் மாதம் 9ம் திகதி Elmfield அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
சிறுவர் நிகழ்வென்பதால் “Health&Safety”
காரணங்களுக்காக ’50 சிறுவர்கள்’ என மட்டுப்படுத்தப்பட்டிருந்தப்போதிலும், அங்கு ஆவலாய் வருகைதந்த எம்தம்பி தங்கைகளை திருப்பிஅனுப்ப மனமில்லாமல்,
அவர்களையும் இணைத்துக்கொண்டு கொண்டாட்டம் ஆரம்பமானது.
ஊரில் பல மைல் தூரம் சைக்கிள் மிதித்து படிக்கசென்றது போல இங்கு பல மணித்தியாலம் “டிரைவ்”செய்து பிள்ளைகளுக்காக வந்தோம் என பெற்றோர் கூறியபோது பெருமிதத்தை உணர்ந்தோம்.
“5வயது “தான் ஆரம்ப வயது என்று இணையத்தில் பிரசுரித்திருந்தாலும் கூட
“என்ட பிள்ளைக்கு இப்ப இரண்டு தான்..ஆனால் அவன் அழமாட்டான்..சேர்த்துகொண்டேயாகவேண்டும்”என சில பெற்றோரின் செல்ல மிரட்டல்கள் எமக்கு அவர்கள் மீதான மதிப்பை மேலும் ஒரு படி உயர்த்தியது.
இவ்வாறான ஊக்குவிப்பும் ,
உற்சாகமும்,ஊட்டலும் தான்
ஒரு “காரை மாணவன்”சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறுவதற்கான மூலாதாரம் என்பதனை மீண்டுமொருமுறை எமக்கு வலியுறுத்தியது.
வித்தியாசமான Chinese Puzzle ,Line up game,Find your team,Tell me a story,Sausages,Roll race,Elves,Gnomes and Giants விளையாட்டுகளை விநோத உடையில் விளையாடிய
காரைக்குட்டிஸ்,காரை இளையோர் மட்டுமில்லாமல் காரைநலன்புரிச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி.சித்திராவும்
“கங்காரு” உடையில் கலந்து கொண்டு கலக்கியிருந்தார்.
சிறியவர் பெரியவர் பேதமின்றி நிகழ்வு ஆரம்பித்தது முதல் நிறைவுவரை ஒரே சிரிப்பு மழைதான்.
விளையாட்டுகளிற்கு மத்தியில் சிற்றுண்டியும் குளிர்பானங்களும் பரிமாறப்பட்ட போதிலும்,
நிகழ்வு நிறைவில் விஷேடமான விருந்துபசார மண்டபத்தில் ,பெரிய திரையில் திரைப்படத்தோடு பரிமாறப்பட்ட Domino’s pizzaதான் அனைவரையும் வாயூர வைத்தது.
சிறந்த விநோத உடைக்கான விருதினை வழங்கிய போது,
“பிரித்தானிய காரை இளையோர் இந்நிகழ்வினை திறம்பட வடிவமைத்து இலவசமாய் நாடாத்துவதற்கு மண்டப ஒழுங்கமைப்பு,உணவு என அனைத்துவிதத்திலும் ஒத்துழைத்த பிரித்தானிய காரைநலன்புரிச்சங்கத்தினரையும்,
உணவுப் பரிமாறுகையிலும் சரி,அரங்கு ஒழுங்கமைப்பதிலும் சரி இளையோரோடு இளையோராய் தோள்கொடுத்து இதனைத் தங்கள் நிகழ்வாகவே மாற்றிவிட்ட பெற்றோரையும்,எப்பொழுதும் தயார்நிலையிலிருந்த காரைஇளையோர் மருத்துவக் குழாமையும்”
நன்றியுணர்வோடு எண்ணிப்பார்த்தோம்.
மீண்டுமொருமுறை சிறுவர் வாழ்க்கையில் சிறகடித்துப் பறப்பதற்கு எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம் இதுவென்பதனை நன்குணர்ந்த நாங்களும் சின்னஞ்சிறியவர்களோடு ஈடுகொடுத்து வயிறுவலிக்கச் சிரித்து மகிழ,
நெஞ்சம் மறக்காத இந்த மாலைப்பொழுது
6.30மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
மண்பத்தைவிட்டு வெளியேற மனமில்லாமல் தயங்கிய சின்னஞ்சிறியவர்களை “next time”என்று சமாளித்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்சென்றபோது “சாதித்துவிட்டோம் நாங்கள்”என்ற பூரிப்பு எங்களனைவர் மனதிலும் !
நன்றி,
பிரித்தானிய காரை இளையோர் அமைப்பு
————————————————————————————————————–
KYO(UK) organised its first ever Karai Kutties Fun Day for children 5-12
on Saturday 9th April 2016, at Elmsfield Church (London)
and what an event it was!
Initially we were unsure whether the event would hit off, but to our surprise we had around 50 children turn up. Unfortunately we had to make the cut off point at 50 for health and safety reasons – but for sure next time we’ll arrange something much bigger!
It was a fancy dress event – and everyone dressed to impress! We had Kiddies and KYO Volunteers dress up as animals, princesses, heroes and many more. Children as young as 2 also dressed up and participated in the fun and games. We played some icebreakers games, team games and to wrap up the event we ate pizza while watching a movie.
When we organised our KYO Meet&Greet, the spaghetti and marshmallow game was so successful that we played it for our Christmas party too! Similarly, we played a game called ‘Mummies’, where teams had to nominate a teammate and wrap them around with toilet paper.
Thank you to all the children who dressed up; the KYO members who dressed up and volunteered; KWS(UK) for providing us financial support; Elmsfield Church; Dominos and the wonderful parents & helpers who travelled from far to bring their children to this event!
Here are some photos from the fantastic day!