காரைச் சங்கமம் 2015 – பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்
காரைச் சங்கமம் 2015, ஞாற்றுகிழமை, 12/07/2015 அன்று Kinsbury High School மைதானம், 600இக்கும் மேற்பட்ட மக்களுடன் இனிதே நடைபெற்றது.
பிரதம விருந்தினராக காரை இந்துக் கல்லூரியில் 18 வருட காலம்(1965-1983) விஞ்ஞானம் , பௌதீகவியல் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக அரும்பணியாற்றிய இளைப்பாறிய ஆசிரியர் திரு A .சோமாஸ்கந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நியூயார்க், அமெரிக்காவில் இருந்து வைத்திய கலாநிதி ராதா செல்வரத்தினம் கோபால் – ராதகோபால் – அவர்களும் , கௌரவ விருந்தினர்களா பிரான்ஸ் நகரத்தில் இருந்து இணையற்ற சமூக சேவையாளர், இளைப்பாறிய ஆசிரியர் திரு. A . செல்வச்சந்திரன் -நேரு மாஸ்டர், திரு முத்துலிங்கம் ஐயா, கனடாவில் இருந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் கடந்தகால தலைவர் திரு.த .பரமானந்தராஜா, கனடா காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு . M . வேலாயுதபிள்ளை , திரு கார்த்திகேசு சிவசோதிநாதன் மற்றும் ஜேர்மனியில் இருந்து திரு. K . ஆனந்தசற்குணநாதன், புங்குடுதீவு நலன் புரிச்சங்க தலைவர் திரு. கங்காகுமாரன் , திரு.கருணைலிங்கம் அண்ணா , மற்றும் வேலணை மத்திய கல்லூரி தலைவர் திரு நடா சிவா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் இடம்பெற்ற விளையாட்டுக்களாவன:- அஞ்சல் ஓட்டம் (Relay Running) உதை பந்தாட்டம், துடுப்பாட்டம், ஓட்டம், தடை ஓட்டம், மற்றும் கயிறு இழுத்தல்.
இத்துடன் விடியோ மற்றும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி.
பிருத்தானியாகாரைநலன்புரிச்சங்கம்