பிருத்தானியா காரைநலன் புரிச்சங்கத்தின் நன்னீர்கிணறுகள் மற்றும்குளங்கள், கேணிகள் புனரமைக்கும் திட்டம்.
பிருத்தானியா காரைநலன்புரிச்சங்கத்தின் நன்னீர் கிணறுகள் மற்றும் குளங்கள், கேணிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ்இதுவரை 30 இற்கும் மேற்பட்ட இடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்ட பிருத்தானியா காரைநலன்புரிச்சங்கம்இத்திட்டத்திற்கென ரூபாய் 500,000 / = காரைஅபிவிருத்திசபைக்கு வழங்கியுள்ளது.
இந்நிதியின் மூலம் கடந்த சில மாதங்களாக மேற்பட்ட கிணறுகள் (அதாவது நீண்ட காலமாக பராமரிக்கப்படாத , கைவிடப்பட்டிருந்த) புனர்சீரமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ்பாகுபாடு இன்றி எல்லாபிரதேசங்களிலும் முக்கியமான நன்னீர்கிணறுகள் அடையாளம் காணப்பட்டு (காரை உதவி அரசாங்க அதிபரின் தகவலின்படி)
எமது காரைஅபிவிருத்திசபை உபசெயலாளர் திரு .ஐ. சபாலிங்கம் , மற்றும் பொருளாளர் திரு.ந. பாரதி அவர்களின் மேற்பார்வையில் மற்றும் ஏனைய நிர்வாகசபைஉறுப்பினர்களின் உதவியுடனும் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்காக பிருத்தானியா காரைநலன்புரிச்சங்கம் இவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.
மேலும் பல நன்னீர்கிணறுகள்புனரமைக்கப்படவுள்ளன என்பதுஇங்கே குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் இனிவரும் காலங்களில்காரைமக்கள்வெளியூர் குடிநீரை பிரதானமாக தங்கியிருப்பதை தவிர்க்கவேண்டும் என்பதே இதன்குறிக்கோள்.
எமது பிருத்தானியா காரைநலன்புரிச்சங்கம் கடந்த காலங்களில் களபூமியில் புதிதாக குளம் ஒன்று அமைப்பத்ற்கு 25 பரப்புகாணி ரூபாய் 2.5 இலட்சத்திற்குகொள்வனவுசெய்து வழங்கியிருந்தது.
அத்துடன் கந்தர்குண்டு, பத்தர்கேணி, அல்லின்வீதிகாமாட்சிகேணிமற்றும்இதே வீதியில் அமைத்துள்ள வேதரடைப்புபகுதியைஅண்டியபகுதியில்உள்ளநன்னீர்கிணறு, வியாவில்வண்ணாங்குளம் என்பன புனரமைப்பதற்குரூபாய் 3 இலட்சங்கள் வழங்கப்பட்டன.
இதன் பிரதான நோக்கமே அங்கு மழை நீரை சேகரிப்பதன் மூலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளின்அடி நீர் மீழ்வலியூட்டலை உறுதிப்படுத்துவதற்காகவும், மற்றும் தற்பொழுது நிலவிவரும் பெரும்போக , சிறுபோக விவசாயத்தை நேர்வழிப்படுத்துவதும், அண்டியுள்ள சுற்றுப்பகுதிகளின் குடிநீர் கிணறு களை நன்னீராக மாற்றுவது என்பதேயாகும்.
மேலும்தற்பொழுதுசடையாளிவரைவர்கோவில்கேணிமுற்றுமுழுதாகபுனருத்தாரணம் செய்யப்பட்டு வருகின்றனது என்பது எல்லோரும் அறிந்தததே. இதற்கென பிருத்தானியா நலன்புரிச்சங்கம் இது வரைரூபாய் 550,000/= வரை அனுப்பிவைத்துள்ளது .
இத்துடன் புனரமைக்கபட்ட கிணறுகள் , குளங்கள், கேணிகள் ஆகியவற்றின் விபரங்கள் மற்றும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி.
பிருத்தானியாகாரைநலன்புரிச்சங்கம்