Karai Welfare Society (UK)
Presents
KARAI KATHAMBAM 2014
Saturday 25th January 2014
AT
Kingsbury High School
Princes Ave
London NW9 9JR
(Hall & Car Park access via – Stag Lane)
Further information please contact
Cithara 020 8342 0403, Kumar 079 5195 0843, Nathan – 07944232014
அன்புடையீர்,
காரை நலன் புரிச்சங்கத்தின் “காரைக் கதம்பம் 2014” பொங்கல்விழா எதிர்வரும் ஜனவரி மாதம் 25ம் திகதி சனிக்கிழமை (25/01/2014) மாலை 4:00 மணிக்கு Kingsbury High School, Princes Ave, London NW9 9JR (Hall & Car Park access via – Stag Lane) இல் நடாத்துவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த பல வருடங்களாக நடைபெற்று வரும் இப்பொங்கல் விழாவானது இங்குள்ள இளம் சமுதாயத்தை கலை நிகழ்வுகள் மூலம் ஒன்றிணைத்து, அவர்களது கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றது. இவ்வருட நிகழ்ச்சிகள் கடந்த காலங்களைப் போல் தரமுடையதாகவும், நல்ல சமுதாய விழிப்புணர்வு கருத்துக்களையும், நகைச்சுவையும், நம் கலை, கலாச்சாரங்களை உள்ளடக்கியதாக இருப்பின் கதம்பம் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
நிகழ்வுகளில் சினிமாப் பாடல்கள் கொண்ட நிகழ்வாக இருப்பின், தயவுசெய்து கருத்தற்ற சினிமாப் பாடல்களை தவிர்த்து, சமுதாய முன்னேற்ற விழிப்புணர்வுகளை எடுத்து வரும் நல்ல இலக்கிய, சரித்திர பிரசித்தி பெற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்தல் கதம்பத்திற்கு மட்டுமன்றி, காரை மண்ணின் கலை, கலாச்சாரத்தையும், கண்ணியத்தையும் கௌரவிக்கும்.
கடந்த வருடம் போல் சிறுவர்ககள் விரும்பின் ஒரு தனி நிகழ்விலும், மற்றும் ஒரு குழு நிகழ்விலும் பங்கு பற்றலாம். தனி நிகழ்வில் பங்கு பற்றாதவர்கள் விருன்பின் இரு குழு நிகழ்வுகளில் பங்கு பற்றலாம்
இக்கடிதத்துடன் நிகழ்ச்சிக்கான விண்ணப்பபடிவம் இணைக்கப்படுள்ளது தயவு செய்து இதனை பூர்த்தி செய்து 31/12/13இக்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
பங்குபற்றும் பிள்ளைகளின் பெற்றோர்களான உங்களது பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிகமிக அவசியம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். பங்குபற்றும் ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா £5 விகிதமும், ஒரு அங்கத்தவர் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பங்கு பற்றினால் அவர்கள் கட்டணமாக £10 களை மட்டும் செலுத்தினால் போதுமானதாகும்.
நன்றி
நிகழ்ச்சி ஒன்றினைப்பாளர்கள்
காரை நலன் புரிச்சங்கம்(UK)